கரூர் கூட்டநெரிசல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தமிழக வெற்றி கழகத்திற்கு சாதகமக கருத்து தெரிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை விஜய் தத்தெடுக்க உள்ளதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
கருர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் விசாரிக்க தடை கோரிய தமிழக வெற்றி கழகத்தின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், சிபிஐ மேற்பார்வையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆக்கட்சியின் பிரசார ஆலோசகர் ஆதவ் அர்ஜூனா வேகமாக வளர்ந்து வரும் தமிழக வெற்றி கழகத்தை முடக்க சதி நடைபெறுகிறது.
24
தாமதமாக வந்தாரா விஜய்..?
விஜய் தாமதமாக பிரசார இடத்திற்கு வந்ததே விபத்துக்கு காரணம் என பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது. நாங்கள் அனுமதி கோரியிருந்தது 3 மணி முதல் 10 மணி வரை. அந்த நேரத்திற்குள் தான் நாங்கள் வந்துள்ளோம். ஆனால் தாமதம் என்ற பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக கரூர் காவல் துறையினர் தான் எங்களை மாவட்ட எல்லையில் வரவேற்பு அளித்தனர். ஏற்கனவே கட்டுக்கடங்காத அளவிற்கு கூட்டம் கூடியிருந்தால் எங்களை அவர்கள் ஏன் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்..?
34
தலைவர்கள் தலைமறைவு..?
சம்பவம் நடைபெற்றவுடன் நான் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் கரூர் மாவட்ட எல்லையில் தான் காத்திருந்தோம். ஆனால் எங்களை காவல் துறையினர் வரவிடவில்லை. நீங்கள் இங்கு வந்தால் கலவரம் வந்துவிடும். ஆகையால் நீங்கள் இங்கு வராதீர்கள் என்று சொன்னார்கள். அதன் அடிப்படையில் தான் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம். ஆனால் நாங்கள் தலைமறைவாகிவிட்டதாக பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.
இதனிடையே கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தனிப்பட்ட முறையில் நான் தத்தெடுக்கப் போவதாக விஜய் தெரிவித்துள்ளார். நிவாரணத் தொகையை வழங்கிவிட்டோம். அத்துடன் எல்லா முடிவடைந்துவிட்டது என இருக்க கூடாது என்று விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் எங்கள் பணி தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.