அடிதூள்! முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Published : Apr 26, 2025, 02:05 PM ISTUpdated : Apr 26, 2025, 03:06 PM IST

Ex-MLAs Pension Increased: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் ரூ.30,000-லிருந்து ரூ.35,000-ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

PREV
14
அடிதூள்! முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
tamil nadu assembly

Ex-MLAs Pension Increased: சட்டமன்றத்தில் இன்று காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. அப்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சூப்பர் அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்: நம்முடைய துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தைப் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். அதேபோன்று, உறுப்பினர் ஜெகன்மூர்த்தி அவர்களும் பேசுகிறபோது அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, ஒட்டுமொத்தமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து என்னிடத்திலே கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

24
CM Stalin

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய அமைப்பைச் சார்ந்தவர்களும் என்னை வந்து நேரடியாகச் சந்தித்து இதுகுறித்து மனுவைத் தந்திருக்கிறார்கள். எனவே, அதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து, முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதிய 30 ஆயிரம் ரூபாய் என்பதை, 35 ஆயிரம் ரூபாயாக இந்த மாதம் உயர்த்தி வழங்கப்படும்.
 

34
pension hike former mlas

தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தைப் பொறுத்தவரையில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் என்பது, மாதமொன்றுக்கு 17,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 

44
Former MLA

முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது ஆண்டொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 75 ஆயிரம் ரூபாய் என்பது, ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஏற்கெனவே, இந்த ஆண்டின் மருத்துவப் படித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 ஆயிரம் ரூபாய், இதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பின்னர் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories