பஹல்காம் தாக்குதல்! இதற்கெல்லாம் மூலக்காரணமே இவங்க தான்! மதுரை ஆதீனம் சொன்ன பகீர்!

Published : Apr 25, 2025, 08:17 AM ISTUpdated : Apr 25, 2025, 11:23 AM IST

Pahalgam Terrorist Attack: பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் வலியுறுத்தியுள்ளார். 

PREV
15
பஹல்காம் தாக்குதல்! இதற்கெல்லாம் மூலக்காரணமே இவங்க தான்! மதுரை ஆதீனம் சொன்ன பகீர்!
Pahalgam Terrorist Attack

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் நாடுகள் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

25
India-Pakistan conflict

போர் பதற்றம்

இந்நிலையில் காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி ஆவேசமாக கூறியுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா பதிலடி கொடுத்தால் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையும் படிங்க: இந்தியா vs பாகிஸ்தான்! ராணுவ பலம் யாருக்கு அதிகம்? முப்படையிலும் கெத்து யார்?

35
Madurai Adheenam

மதுரை ஆதீனம் ஆவேசம்

இந்த பதற்றமான சூழலுக்கு இடையே ஐ.நா. சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என மதுரை ஆதீனம் ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்து மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள வீடியோவில்: காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உலக நாடுகள் முழுக்க கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஐ.நா. சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என கூறினார். 

45
PM Modi

உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு எதையுமே அனுப்பக் கூடாது

மேலும் உலக நாடுகளில் நடைபெறும் எந்த விளையாட்டு போட்டியிலும் பாகிஸ்தானை பங்கேற்க அனுமதிக்க கூடாது. முக்கியமாக பாரதம் (இந்தியா) பாகிஸ்தான் உடன் விளையாடவே கூடாது. பாகிஸ்தானை ஐ.நா.வில் ஒரு அங்கமாக வைத்திருப்பதை விட்டுவிட்டு அவர்களை நீக்கிவிட வேண்டும். உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு எதையுமே அனுப்பக் கூடாது. பயங்கரவாதத்திலும் மதத்தை சொல்லச் சொல்லி கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறது. தீவிரவாதங்களின் அமைப்பே பாகிஸ்தான் தான். எல்லை கதவுகள் மூடப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார். இது 60 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கக் கூடிய விவகாரம்.

இதையும் படிங்க: பாகிஸ்தானியர்களுக்கான விசா முழுமையாக நிறுத்தம்! இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

55
Pahalgam terrorist attack

இந்த சைனாக்கார பயலுகதான்

 இதற்கெல்லாம் மூலக்காரணம் இந்த சைனாக்கார பயலுகதான். சைனாகாரன் தான் ஆயுதங்கள் எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறான். கம்யூனிஸ்ட் நாடான சைனாதான் யாரும் இருக்கக்கூடாது என படைகளை அனுப்புகிறார்கள். சைனாவும் பாகிஸ்தானும் நமக்கு எதிரியாகத்தான் செயல்படுகிறார்கள் என  தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories