ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி.! குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Published : Apr 25, 2025, 07:43 AM ISTUpdated : Apr 25, 2025, 02:56 PM IST

தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 1915 முதுகலை ஆசிரியர்கள், 2868 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

PREV
14
ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி.! குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Tamilnadu Teacher recruitment : கல்வி தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும், அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லையெனவும் கூறப்படுகிறது.

எனவே ஆசிரியர் பணிக்காக பல ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருக்கும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் ஆசியர்கள் காலிப்பணியிடம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி,

24
Anbil mahesh

ஆசிரியர்கள் காலிப்பணியிடம்

பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி, தமிழகத்தில் தொடக்க கல்வியை பொறுத்த வரையில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்,

இடை நிலைக்கல்வியை பொறுத்த வரையில் 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், உயர்நிலைக் கல்வியை பொறுத்த வரையில் 11 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசியிர்கள் உள்ளனர்.  நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது முதுகலை ஆசிரியர்கள் தான்.

34
School teacher

1915 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு

இன்படி விரைவில் 1915 முதுகலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும், 2868 இடைநிலை ஆசியர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி, விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதே போல  கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் ,

அரசு சட்டக் கல்லூரிகளில் 132 இணைப்பேர் ஆசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் சட்டம் முன்பதிவு பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு இனிய வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

44
School teacher job

தனி கட்டணமாக ரூபாய் 200 வசூலிக்கப்படுவது ரத்து

மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வியியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது மாநில தகுதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இதற்கான போட்டி தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தில் விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் தனி கட்டணமாக ரூபாய் 200 வசூலிக்கப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories