சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையங்களும் இணைந்து 25.04.2025 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து கல்வித்தகுதியுடையவர்களும் கலந்துகொள்ளலாம்.
Tamil Nadu jobs oppurtunity : தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் கல்வியை முடித்து வேலை தேடி பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தனியார் துறையோடு இணைந்து வேலைவாய்ப்புகளை ஏற்பாடு செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 2.50 லட்சம் பேருக்கு தனியார் துனை வேலைவாய்ப்பு மூலம் வேலையானது கிடைத்துள்ளது. அந்த வகையில் தற்போது சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
25
Job Opportunity In Chennai
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்
சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார்துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.
35
Chennai job fair
20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள்
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையங்களும் இணைந்து 25.04.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது
45
Job vacancy
வேலைவாய்ப்பு முகாம்-தகுதி என்ன.?
இம்முகாமில் 8-ஆம் வகுப்பு.10-ஆம் வகுப்பு,12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ டிப்ளமோ,பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி), ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின்வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.
55
Chennai job fair
எந்தவித கட்டணமும் இல்லை
வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை ) பதிவேற்றம் வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) செய்யவேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் மாவட்ட கொள்ளுமாறு சென்னை ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.