மயங்கிய ப.சிதம்பரம்.! பதறிய மோடி- உடல் நிலை எப்படி இருக்கு.? லேட்டஸ்ட் அப்டேட்

Published : Apr 09, 2025, 12:55 PM IST

காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் அகமதாபாத்தில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிக வெப்பம் காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

PREV
14
மயங்கிய ப.சிதம்பரம்.! பதறிய மோடி- உடல் நிலை எப்படி இருக்கு.? லேட்டஸ்ட் அப்டேட்

P Chidambaram health condition : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம். காங்கிரஸ் செயற்குழு (CWC) கூட்டம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அகமதாபாத் சென்றிருந்தார்.  84வது தேசிய மாநாடு ஏப்ரல் 8-9 ஆகிய தேதிகளில் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நேற்று  அங்குள்ள  சபர்மதி ஆசிரமம் சென்றிருந்த ப.சிதம்பரம் மயக்கம் அடைந்து கிழே விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ப.சிதம்பரத்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

24
p chidambaram health

மயங்கி விழுந்த ப சிதம்பரம்

அவர் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக ப.சிதம்பரம்  மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து தனது  தந்தையின் உடல்நிலை குறித்து அவர் மகன் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், தனது தந்தை நலமுடன் இருக்கிறார் என தெரிவித்து இருந்தார்.  

34
Modi-Chidambaram

ப சிதம்பரம் உடல்நிலை- விசாரித்த மோடி

இதனிடையே நேற்று ப.சிதம்பரம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில், , அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

 இதனையடுத்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு ப.சிதம்பரம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.  குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிதம்பரத்திற்கு தேவையான மருத்துவ உதவியை உறுதி செய்தார். 

44
Congress leader P Chidambaram

நலமுடன் உள்ளேன்- ப.சிதம்பரம்

இந்த நிலையில் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அதிக வெப்பம் காரணமாக, எனக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது. அனைத்து சோதனைகளும் இயல்பாக இருப்பதாக தெரிவித்துள்ளவர், நான் இப்போது முற்றிலும் நலமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளா்.  அனைவருக்கும் நன்றி எனவும் ப.சிதம்பரம்  குறிப்பிட்டுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories