தஞ்சாவூரில் முதலை பண்ணை.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published : Apr 09, 2025, 11:01 AM ISTUpdated : Apr 09, 2025, 11:22 AM IST

சட்டப்பேரவையில் சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணை அமைக்கும் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்தார். தஞ்சாவூர் அருகே பண்ணை இருப்பதால், சிதம்பரத்தில் வாய்ப்பில்லை என்றார். மேலும், வனத்துறை சாலைகள் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

PREV
14
தஞ்சாவூரில் முதலை பண்ணை.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Thanjavur crocodile farm : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று இதற்கு முன்னதாக நடைபெற்ற  கேள்வி நேரத்தின் போது, சிதம்பரம் கே.ஏ.பாண்டியன், சிதம்பரம் பழைய கொள்ளிடம் ஆற்று பகுதியில் முதலை பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா.? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதால் கிராம்ப்பகுதிக்குள் புகுந்து கால்நடைகளை பிடித்து சாப்பிடுவதாக தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, சிதம்பரம் தொகுதி பழை கொள்ளிடம் அருகே முதலைப்பண்ணை அமைக்க எந்த வித திட்டமும் இல்லை,

24
Chidambaram crocodile farm

தஞ்சாவூரில் முதலை பண்ணை

தஞ்சாவூர் மாவட்டம் அனைக்கரை பகுதியில் முதலகைகள் பாதுகாப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 35 லட்சம் ரூபாய் ஒதுக்கி அரசாணை வெறியிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பகுதியில் முதலை பண்ணை அமைக்கப்பட உள்ளது. அதற்கு அருகில் தான் சிதம்பரம் பகுதி உள்ளதால் முதலை பண்ணை அமைக்க வாய்ப்பில்லை என்று பதில் அளித்தார். 

தமிழ்நாட்டில் 3 இடங்களில் முதலை பண்ணைகள் உள்ளது. கோடை காலத்தில் ஆழமான பகுதிகளில் சென்று தங்கி விடுகிறது. அணைக்கரை பகுதிகளில் முதலை பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. முதலையால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு 25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.  

34
FOREST ROAD IN TAMILNADU

வனப்பகுதியில் சாலை

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, சிதம்பரம் பாண்டியன், சிதம்பரம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 20 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. மீனவ கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலைகளை ஏற்படுத்த வனத்துறை அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, வனத்துறைக்கு சொந்தமான பழுதடைந்த சாலைகளை சீரமைக்க 500 எக்டேருக்கு 250 கோடி நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. 

44
Forest road repair

புதிய சாலைகள் அமைக்கப்படும்

இதில் புதிய சாலைகள் அமைப்பது மற்றும் பழைய சாலைகள் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே, வனத்துறை நிலங்களில் புதிய சாலை அமைப்பது குறித்து மனு அளித்தால் பரிசீலனை செய்து புதிய சாலைகள் அமைத்து தரப்படும் என்று அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories