Published : Jul 29, 2025, 10:12 AM ISTUpdated : Jul 29, 2025, 10:50 AM IST
தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்காமல் இருப்பது கல்வி உரிமைச் சட்டம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக் கொள்கையில் தமிழக அரசு தற்போது வரை இணையாத நிலையில் தமிழகத்திற்கான கல்வி நிதியினை ஒதுக்கீடு செய்யாமல் மத்திய அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது. இதனிடையே தமிழகத்திற்கான கல்வி நிதியை உடனடியாக வழங்குமாறு தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், எம்பி கனிமொழி உள்ளிட்டோ மத்திய அமைச்சர் தமேந்திர பிரதானை நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
24
ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் சமூக வலைதளப் பக்கத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024 - 25 நிதியாண்டுக்கான சம்கரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திறி்கு அளிக்க வேண்டிய ரூ.2151 கோடியை நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இந்த நிதியை நம்பி கிட்டத்தட்ட 65 லட்சம் மாணவ, மாணவியர் தனியார் பள்ளிகளில் கல்வி பெற்று வருவதோடு, 6 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பள்ளிகிளல் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடிங்கியுள்ளன.
34
மாணவர்கள் பாதிப்பு
மேலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 25 விழுக்காடு மாணவ, மாணவியரை தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியரின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசின் நிபந்தனையை மாநில அரசு ஏற்காதது என்பது மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சினை. இந்த காரணத்தைச் சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்கு உரியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திறகும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை விடுவிக்காதது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஏழையெளிய மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டுக்கான 2151 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கோரியதாகவும், ஆனால் அவரை சந்திப்பதை பிரதமர் மோடி தவிர்த்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் கண்டன அறிக்கை கவனம் பெற்றுள்ளது.