ஓபிஎஸ்-ஐ போல் உங்களையும் புறக்கணித்துவிட்டாரா பிரதமர்? ஒரே வரியில் டிடிவி தினகரன் கொடுத்த மாஸ் பதில்!

Published : Jul 29, 2025, 09:56 AM IST

ஸ்டாலின் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதால் தான் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக 200 தொகுதிகளில் வெல்வோம் என்கிறார்கள். திமுக ஆட்சி முடிவுக்கு வரும்.

PREV
15
பிரதமர் மோடி

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார். பிரதமர் மோடியை திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்தனர். இதனிடையே முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் டிடிவி.தினகரனையும் பிரதமர் மோடி சந்திக்க மறுத்துவிட்டாரா என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

25
டிடிவி.தினகரன்

நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: மக்கள் ஸ்டாலின் உடன் இல்லை என்பதாலேயே உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார். கற்பனையான திட்டம் போட்டு முயன்று பார்க்கிறார். தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாத அவர், 200 தொகுதிகளில் வெல்வோம் என்கிறார்கள். திமுகவினர் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் தலைவர்களே திமுகவை விமர்சிக்கிறார்கள். எனவே, திமுக ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி என தெரிவித்தார்.

35
முதல்வர் ஸ்டாலின்

மேலும் பேசிய அவர் காமராஜர் பற்றி விமர்சனம் வரும்போது வெகு குண்டு எழு வேண்டிய காங்கிரஸ் கட்சியினர், எம்பி- எம்எல்ஏ சீட் வேண்டும் என்பதற்காக திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என்பதே உண்மை. அவர்கள் காமராஜரை மறந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. தேர்தலுக்கு முன்பு அனைத்து குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுப்போம் என்றது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு 3 ஆண்டுகளாக எதுவுமே பேசவில்லை. எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே திட்டத்தை அறிவித்தார்கள். அதிலும் தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் என்றனர். இப்போது தேர்தல் நெருங்குவதால் அனைவருக்கும் தருவோம் என்கிறார்கள். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரவே திமுக முயல்கிறது என விமர்சித்தார்.

45
சட்டப்பேரவை தேர்தலில் போட்டி

அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் அமமுக போட்டியிடும். அதேபோல் 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பது குறித்து முடிவாகவில்லை. என்டிஏ கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். 2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் இருக்கும். அமித்ஷா என்ன கூறினாரோ? அதைத்தான் நானும் கூறுகிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு முதல்வராகும் அனைத்து தகுதிகளும் உண்டு.

55
பிரதமர் மோடி - டிடிவி.தினகரன்

தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை சந்திக்க நான் நேரம் கேட்கவே இல்லை என ஒரே வரியில் பதிலளித்தார். என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்காகவும் நான் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்வேன். என்னை அழைத்தால் நிச்சயம் பிரச்சாரம் செய்வேன். வரும் செப்டம்பர் 4ம் தேதி மதுரையில் ஓபிஎஸ் மாநாடு நடத்துகிறார். அந்த மாநாட்டில் நிச்சயம் நான் பங்கேற்பேன் என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories