தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி வருகிறது. அந்த வகையில் அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பின்னடைவை சந்தித்தார். முதலில் சசிகலாவால் முதலமைச்சர் பதவியை இழந்த ஓபிஎஸ், அதிமுகவிற்கு எதிராக தர்ம யுத்தம் தொடங்கினார்.
அடுத்தாக எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து ஆட்சி மற்றும் கட்சியை வழிநடத்திய நிலையில் 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு பிறகு மீண்டும் பின்னடைவை சந்தித்தார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்ட போராட்டங்களைமேற்கொண்டு வருகிறார். ஒரு கட்டத்தில் அனைத்தும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக இருந்ததால் பாஜகவை நம்பியிருந்தார்.
24
காத்திருந்த ஓபிஎஸ்- கைவிட்ட பாஜக
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி திடீரென முறிவை சந்தித்த போது பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டார் ஓபிஎஸ், எனவே தன்னை பாஜக கைவிடாது என நம்பியிருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிமுகவுடன் தன்னை இணைத்து விடும் என எதிர்பார்த்து இருந்தவருக்கு ஷாக் கொடுத்து உள்ளது பாஜக, அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது பாஜக,
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்த்த ஓபிஎஸ்யை கண்டு கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க பல முறை அனுமதி கேட்டும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் வந்த மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் கொடுத்தும் பாஜக கண்டு கொள்ளவில்லை.
34
கடம்பூர் ராஜூக்கு ஓபிஎஸ் கண்டனம்
இதனையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக அறிக்கை கொடுத்து வரும் ஓபிஎஸ் இன்று நேரடியாகவே பாஜகவை விமர்சித்துள்ளார். அந்த வகையில் 1998-ல் ஜெயலலிதா வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசைக் கவிழ்த்தது "வரலாற்றுப் பிழை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் கடம்பூர் ராஜூவிற்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நலன் கருதி அம்மா அவர்கள் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியிலிருந்து விலகியதால்தான். 2001 ஆம் ஆண்டு அதிமுக தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
அம்மா அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்கள். இந்த வரலாறு தெரியாமல் கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியிருப்பது அவரின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.அம்மா அவர்கள் செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி. அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தது.
ஆனால், அம்மா அவர்களால் சட்டமன்ற உறுப்பினராக்கப்பட்ட, அமைச்சராக்கப்பட்ட கடம்பூர் ராஜு பேச்சுதான் வரலாற்றுப் பிழை, "மோடியா, இந்த லேடியா” பார்த்துவிடலாம் என்று சவால்விட்டு, 37 தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற காரணமாக இருந்தது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.