அதிமுகவில் பிளவு நீடித்துவரும் நிலையில், ஓபிஎஸ் டிசம்பருக்குள் கட்சி இணைய வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றாலும், நடுநிலையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
எடப்பாடி மறுத்தாலும் டிசம்பருக்குள் அதிமுக ஒன்றிணையும்.! அடித்து கூறும் ஓபிஎஸ்
அதிமுகவில் அதிகார மோதல் காரணமாக பல பிளவுகளாக முன்னனி தலைவர்கள் பிரிந்து உள்ளனர். இதன் காரணமாக வாக்குகள் பிரிந்து தேர்தலில் தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது.
எனவே இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் ஒன்றிணைந்து அதிமுகவை வளர்க்க வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதற்கு ஏற்ப ஓ.பன்னீர் செல்வமும் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயார் என கூறி வருகிறார்.
24
EPS VS OPS
ஆனால் தற்போது அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி ஒநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது என இணைப்புக்கு எண்டு கார்டு போட்டார் இபிஎஸ்.
எனவே அதிமுகவில் ஓன்றிணையும் என காத்திருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக இணைப்பிற்கு வாய்ப்பே இல்லையா.? என கேள்வியோடு காத்திருந்தவர்களுக்கு ஓபிஎஸ் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
34
OPS AND AMITSHAH
அதன் படி, சேலத்தில் பாமக மூத்த தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பிறகு கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டதா.? என்ற கேள்விக்கு,
கடந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின் போது முதல் அதிமுக ஒன்றினைய வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவரான அமித்ஷா கூறி வந்ததாக தெரிவித்தார்.ஏற்கனவே அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் கோவையில் முகாமிட்டுள்ள அமித் ஷாவை சந்திப்பதற்கு தற்போது நேரம் கேட்கவில்லை என குறிப்பிட்டார்.
44
ADMK OPS
பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால் தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும் என தெரிவித்தவர், பிரிந்துள்ள அதிமுகவை ஒன்றிணைப்பதற்காக நடவடிக்கைகள் தங்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். அதே நேரத்தில் கட்சி ஒன்றிணைய வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறினாலும் டிசம்பருக்குள் கட்சி இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதேபோல் தங்கள் தரப்பில் இருந்து இணைப்புக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் இபிஎஸ் தரப்பில் இருந்து இணைப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என குறிப்பிட்டார். அதே வேளையில் நடுநிலையாளர்கள் தங்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என தெரிவித்த ஓபிஎஸ், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான செங்கோட்டையனின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.