மேலும் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ், அவரது மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோர் தஞ்சாவூர் ஒரத்தநாடு கீழையூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்மிட சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.