tirupathi
திருப்பதியில் குவியும் பக்தர்கள்
திருப்பதிக்கு சென்று வந்தால், திருப்பம் ஏற்படும், கேட்டதை கொடுக்கும் கலியுக தெய்வம் ஏழுமலையான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உலகின் பணக்கார கடவுளாக இருப்பவர் திருப்பதி ஏழுமலையான். உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தால் மன நிம்மதி ஏற்படும். திருப்பதி கோயிலுக்கு நாள் தோறும் கோடிக்கணக்கில் பணம் கொட்டோ கொட்டு என கொட்டுகிறது. இங்கு கொடுக்கப்படும் லட்டும் உலகம் முழுவதும் பிரபலம்.
tirupati laddu
பக்தர்களுக்கு கூடுதல் லட்டு
தரிசனம் செய்யதவர்களுக்கு ஆதார் அடிப்படையில் தலா 2 லட்டுகள் மட்டும் வழங்கப்படும். அந்த லட்டை தங்களது உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஒரு துண்டு பிரித்து கொடுப்பார்கள். எனவே கூடுதல் லட்டுக்கள் வழங்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்திருந்தது. . இதனையடுத்து தற்போது அந்த கோரிக்கைக்கு திருமலை திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது.
tirumala tirupati
டிசம்பர் மாத தரிசன டிக்கெட்
இந்தநிலையில் திருப்பதி கோயிலுக்கு செல்ல நாள் தோறும் பக்தர்கள் சென்று வருகின்றனர். அந்த வகையில் பக்தர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு திருப்பதிக்கு சென்று வரும் வகையில் 3 மாதங்களுக்கு முன்பு இருந்து டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் பக்தர்கள் இலவச சர்வ தரிசனம், நேர ஒதுக்கீடு தரிசனம், கட்டண தரிசனம் என பல்வேறு தரிசனங்களையும் திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை, சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து ஆன்லைன் டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இதே போல சேவைகள், தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவற்றிற்கான முன்பதிவுகளும் நிறைவடைந்து விட்டன.
tirupati
முன்பதிவு தொடங்கியது
இந்தநிலையில் திருப்பதி கோயிலில் டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று காலை முதல் தொடங்கியது. லக்கி டிப்பை பொறுத்தவரை நிஜபாத சேவை, அஷ்டதல பாத பத்மாராதனை, சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை ஆகிய சேவைகள் அடங்கும். இன்று காலை டிசம்பர் மாத முன்பதிவு தொடங்கியதும் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.
அதே நேரத்தில் டிசம்பர் மாதம் சுப்ரபாத சேவையில் பங்கேற்க நினைப்பவர்கள், டிசம்பர் 15ம் தேதி வரை மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 24 ஆம் தேதி அன்று திருப்பதியில் ரூ.300-க்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.