வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெளியிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் கொளுத்தும் வெயிலை விட தற்போது அதிகமாக அனல் காற்று வீசிவருகிறது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியவே வரமுடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் எப்போது வெயில் குறையும் என மக்கள் ஆவலோடு காத்துள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கமானது உச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை (18.09.2024 மற்றும் 19.09.2024) தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.