RATION CARD : இரண்டே நிமிடத்தில் ஆன்லைனில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி.! இதோ எளிய வழிமுறை

First Published | Sep 18, 2024, 1:59 PM IST

தமிழகத்தில் அரசின் சலுகைகளைப் பெற ஸ்மார்ட் ரேஷன் கார்டு அவசியம். புதிய கார்டுகளைப் பெறுவதற்கான விண்ணப்ப செயல்முறை மற்றும் டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்வது குறித்து அறியலாம்.

smart card

ரேஷன்கார்டின் முக்கியத்துவம்

தமிழகத்தில் நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமல்ல அரசின் சலுகைகளை பெறுவதற்கும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு முக்கியமானதாகும். அந்த வகையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம், மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கும் ரேஷன் கார்டு கட்டாயமாகும்.  

மேலும் இருப்பிடச் சான்றிதழ், மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், 100 நாள் வேலை, வங்கிக் கணக்கு  தொடங்குவதற்கும் குடும்ப அட்டை கட்டாயமாகும். தமிழகத்தில் பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளுக்கு மானிய விலையில் உணவு பொருட்கள் வாங்குவதற்கு முழு நேர மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் என ஒட்டு மொத்தமாக 36ஆயிரத்து 954 கடைகள் உள்ளது. இந்த கடைகளில் மானிய விலையில்  உணவுப்பொருட்களான அரசி, சக்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை விநியோகிக்கப்படுகிறது.

ரேஷன் கார்டின் வகைகள்

மேலும் மழை வெள்ள காலத்தில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அரசின் உதவி தொகையை பெறுவதற்கும் பொங்கல் பண்டிகையின் போது பரிசு பொருட்களை பெறுவதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகைகளில் பிரிந்து வழங்கப்படுகிறது. அதற்கு ஏற்ப உணவு பொருட்களும் வழங்கப்படுகிறது. உயர் வருவாய் பிரிவு,  வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளை, இளஞ்சிவப்பு, கோதுமை அட்டை, பச்சை மற்றும் நீல அட்டைகள் உள்ளது. இதில் ஒரு சில அட்டைகளுக்கு அரிசி மட்டும் அதிகளவில் வழங்கப்படும். மற்றொரு அட்டையில் கோதுமை, மண்ணெண்ணெய், சக்கரை என பொருட்கள் வழங்கப்படும் மேலும் ஒரு சில அட்டைகளுக்கு எந்தவித பொருட்களும் இல்லாமல் அடையாளத்திற்காகவும் ரேஷன் அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது.. 
 

Tap to resize

புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணி

இந்தநிலையில் புதிய ஸ்மார்ட் கார்டுகள் கடந்த ஓன்றரை ஆண்டுகளாக விநியோகிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மகளிர் உரிமைத்தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பால் லட்சக்கணக்கான மக்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர்.

இதனால் சுமார் 3லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அரசு அனைத்து விண்ணப்பங்களின் பரிசீலனையும் நிறுத்தி வைத்தது. புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணியும் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து மக்களவை தேர்தல் அறிவிப்பு வந்ததால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது. இதனாலும்  காலம் தாமதிக்கப்பட்டது.

Free Electricity Cancellation: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து! யாருக்கெல்லாம் தெரியுமா?

ரேஷன்கார்டு விண்ணப்பிப்பது எப்படி.?

இந்தநிலையில் சுமார் ஓராண்டுக்கு பிறகு 3 லட்சம் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியானது தொடங்கியது. இதில் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஸ்மார்ட் கார்ட் அச்சடித்து விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள உணவு பொருள் வழங்கல் துறையிடம் முறையிட்டும் வருகின்றனர். 

இந்தநிலையில் எளிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது தொடர்பாகவும், ரேஷன் கார்டு காணாமல் போனால் எளிய முறையில் இணையதளத்தில் இருந்து எப்படி டவுன்லோட் செய்யலாம் என்பதையும் தற்போது பார்க்கலாம். அந்த வகையில் புதிய ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு இணையதளத்தில் TNPDS என்ற பக்கத்திற்குள் சென்றவுடன் அந்த பக்கத்தில் மின்னனு  அட்டை சேவைகள் என்ற காலம் இருக்கும். அதில், புதிய அட்டை விண்ணப்பிக்க, மின்னணு அட்டை விண்ணப்பித்தின் நிலை , மறுபரிசீலனை விண்ணப்பம்  எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். 

இணையதளத்தில் பூர்த்து செய்ய வேண்டியது என்ன.?

அதில்  இருக்கும் அந்த காலத்தில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிப்பதற்கு என்பதனை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து  புதிய மின்னணு அட்டை விண்ணப்பிப்பதற்கான பக்கத்திற்குள் செல்லும். அங்கு  குடும்பத் தலைவரின் பெயர்,தந்தையின் பெயர், முகவரி, எந்த மாவட்டம், மண்டலம், கிராமம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் முகவரியை பூர்த்தி செய்ய  வேண்டும்.

இதனையடுத்து குடியிருப்புச் சான்று ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும், ஆதார் கார்டு அல்லது வேறு ஏதேனும் சான்று இருந்தால் இணைக்க வேண்டும். அடுத்ததாக ஏற்கனவே எரிவாயு சிலிண்டர் உள்ளதா என்பது தொடர்பான விவரங்களை பதிவு செய்யப்பட்டு உறுதி செய்தால் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதனையடுத்து உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் பரிசீலனை செய்த பிறகு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் எடுப்பது எப்படி.?

அடுத்ததாக நவீன காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் யுகமாக மாறிவிட்ட காரணத்தால் ஒரே நிமிடத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த வகையில், தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறையின் இணையதள பக்கமான TNPDS என்ற பக்கத்தில் செல்ல வேண்டும். அங்கு பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதில் ஸ்மார்ட் கார்டை பிரிண்ட் எடுக்க பயணாளர் நுழைவு என்ற பக்கத்தில் செல்ல வேண்டும் அங்கு ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும் பின்னர் கேப்ட்சா பதிவு செய்த பிறகு மொபைல் போனிற்கு வரும் ஓடிபி வரும். அதனை பதிவிட்ட பிறகு அடுத்த பக்கம் செல்லும்.

டிஜிட்டல் பிரிண்ட்

அங்கு ரேஷன் பொருட்கள் வாங்கும் கடை விவரங்கள் அந்த பக்கத்தில் தெரியும்.  குடும்ப அட்டை எண், மின்னணு கார்டு எண்,  குடும்ப அட்டை வகை அரிசியா சர்க்கரையா எந்த வகை என இடம்பெற்றிருக்கும்.  குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை,  சிலிண்டர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதில் கடைசியாக மின்னணு அட்டை பதிவிறக்க கோப்பு என்று வாசகம் இருக்கும்.  அதனை கிளிக் செய்தால் அடுத்த நிமிடமே நமது மொபைல் போனில் அல்லது கணினியில் நமது ரேஷன் கார்டு  டிஜிட்டல் பதிவிறக்கம் செய்யப்படும் இதனை வைத்தும் உணவுப் பொருட்களானது வாங்கிக் கொள்ளலாம்

Latest Videos

click me!