திருவண்ணாமலை ராமலிங்கனார் 3வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சொந்தமாக இ - சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் சிவசுதாகர் (32). இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது நிறைமாத கர்ப்பிணியான தேவி பிரசவத்திற்காக செய்யாறில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், ஆறுமுகம், தன்னுடைய மனைவியையும், மகன் சிவசுதாகரையும் அழைத்துக்கொண்டு துணி எடுப்பதற்காக காஞ்சிபுரத்திற்கு சென்றிருக்கிறார். துணி வாங்கி முடித்ததுமே, மனைவியையும் குழந்தையையும் பார்ப்பதற்காக செய்யாறுக்கு சிவசுதாகர் கிளம்பினார். மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு தன்னுடைய நண்பர் சஞ்சய் என்பவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு செய்யாறில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
tiruvannamalai
சேத்துப்பட்டு அடுத்த வெளுக்கம்பட்டு கூட்டுரோடு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சிவசுதாகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த சஞ்சய் படுகாயமடைந்தார். மேலும் இருந்த இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.
உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, காஞ்சிபுரத்திலிருந்து துணி வாங்கிக்கொண்டு, சிவசுதாகரின் பெற்றோர் ஆறுமுகமும் மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமியும் இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலைக்கு நோக்கி வந்துக்கொண்டிருந்தனர். அப்போது கூட்டுரோடு அருகே கூட்டாக நிறைய பேர் நின்றுக்கொண்டிருந்ததால் யாருக்கு என்ன ஆச்சு என்பதை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் சென்றுள்ளனர்.
அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விபத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது தங்கள் தங்களுடைய மகன் சிவசுதாகர் என்பதை அறிந்து அதிர்ச்சியில் நெஞ்சில் அடித்துக்கொண்டு அலறி கூச்சலிட்ட படியே கதறினார். பின்னர் அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்தனர். இந்த விபத்து குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் யாரோ சிக்கியதை பார்க்க சென்ற போது தனது மகன் தான் விபத்தில் சிக்கி உயிரிழந்த கண்ட தாய், தந்தை கதறியது வேடிக்கை பார்க்கவர்கள் கண்ணில் கண்ணீர் வரவழைத்தது.