சினிமா பாணியில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து 5 பேர் பலி! கண் கலங்கிய கையோடு நிவாரணம் அறிவித்த முதல்வர்!

Published : May 18, 2025, 09:42 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மினி வேன் கிணற்றில் விழுந்து 5 பேர் பலியான நிலையில்  முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த கையோடு நிவாரணம் அறிவித்துள்ளார். 

PREV
15
ஆலய பிரதிஷ்டை விழா

கோவை மாவட்டம் சங்கிலியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ் (50). இவரது மனைவி வசந்தா (45), மகன் கெர்சோம் (29), இவரது மனைவி சைனி கிருபா (26), ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின், உறவினர்கள் ரவி கோயில் பிச்சை (55), இவரது மனைவி லெற்றியா கிருபா (40), ரவி கெர்சோன் என்பவரின் மகள் ஜெரினியா எஸ்தர் ஆகிய 8 பேரும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வெள்ளாளன்விளை கிராமத்தில் நடந்த தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக நேற்று காலை மினி வேனில் சென்றுக்கொண்டிருந்தனர். மோசஸ் வேனை ஓட்டினார்.

25
கிணற்றுக்குள் பாய்ந்த மினி வேன்

நேற்று மாலை 4.00 மணியளவில் சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே மினி வேன் வந்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த மினி வேன் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையின் வலதுபுறம் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் தலைக்குப்புற பாய்ந்தது. இதில் சுதாரித்துக்கொண்டு சைனி கிருபாகரன், ஜெரின் எஸ்தர் ஆகிய 2 பேர் காரின் கதவை திறந்து வெளியே குதித்து உயிர் தப்பினர்.

35
குழந்தை உட்பட 5 பேர் பலி

இதில், மோசஸ், அவரது மனைவி வசந்தா, அவரது மகன் ஹெர்சோம், ஜெயபால் மகன் ரவி கோயில் பிச்சை, அவரது மனைவி லெட்ரியா கிருபா, ஹெர்சோம் மகனான ஒன்றரை வயது ஸ்டாலின் ஆகியோர் காருடன் கிணற்றுக்குள் விழுந்தனர். இந்த கிணற்றில் 50 அடி அளவுக்கு தண்ணீர் இருந்ததால் வேன் கிணற்றில் மூழ்கியது. அலறல் சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் கெர்சோன் லேசான காயத்துடன் மீட்டனர். மற்ற 5 பேரும் வேனுடன் கிணற்றில் இருந்த தண்ணீரில் மூழ்கினர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளி வீரர்கள் இரு பொக்லைன் இயந்திரங்கள், ராட்சத கிரேன் ஆகியவற்றின் துணையுடன் பல நேரமாக மீட்பு பணி நடைபெற்றது. பின்னர் 4 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒன்றரை வயது குழந்தையின் உடலை தேடி வந்தனர். மேலும் ஆம்னி வேனும் மீட்கப்பட்டது. வாகனத்தில் மொத்தம் இருந்த 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த கையோடு நிதியுதவியை அறிவித்தார்.

45
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம்-2 கிராமத்தில் நேற்று மாலை கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் வட்டம், வெள்ளாளன் விளை, மீரான்குளம் – சிந்தாமணி சாலையில் 8 நபர்களுடன் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலையின் அருகில் இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்ததில் ரவி கோயில்பிச்சை (60) த/பெ.சந்தோஸ், ஹெச்சியா கிருபாகரன் (49) க/பெ.ரவி கோயில்பிச்சை, மோசஸ் ( 50) த/பெ.தேவதாஸ், வசந்தா ( 49) க/பெ.மோசஸ் மற்றும் குழந்தை ஸ்டாலின் (1½ வயது) த/பெ.கெர்சோம் ஆகிய ஐந்து நபர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

55
நிவாரணம் அறிவிப்பு

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories