LPG Gas Cylinders Price : குட் நியூஸ்.. சமையல் எரிவாயு விலை குறைந்தது..! எவ்வளவு தெரியுமா.?

First Published | Jul 1, 2024, 7:15 AM IST

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு விலை சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சிலிண்டர் ஒன்றுக்கு 31 ரூபாய் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

சமையல் எரிவாயு விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது.  அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று மாற்றம் செய்து வருகிறது.

ஒரு சில மாதங்கள் சிலிண்டர் விலை அதிகரிக்கும், ஒரு சில மாதங்கள் சமையல் எரிவாயு விலை குறையும். இந்தநிலையில் கடந்த 4 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை குறைந்துள்ளது. 

indane

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை

இந்த நிலையில் ஜூலை மாதம் தொடக்கமான இன்றும் சமையல் எரிவாயு விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்தது. சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ. 1, 840.50 ஆக விற்பனை செய்யப்பட்டது. 

Train : தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊருக்கு போகனுமா.? இதை விட்ட வேற சான்ஸ் கிடைக்காது- ரிசர்வேஷன் தொடங்கியாச்சு
 

Tap to resize

ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி

இந்தநிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வணிக எரிவாயு சிலிண்டருக்கான விலையை 31 ரூபாய் குறைத்துள்ளது.  19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1809 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் வணிகப்பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை 151 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வீட்டு சமையல் எரிவாயு விலை

அதே நேரத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை, வழக்கம் போல்  ரூ. 818.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரிக்காத காரணத்தால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர். 

செல்வமகள் திட்டம் உள்பட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி அறிவிப்பு! எவ்ளோ தெரியுமா?

Latest Videos

click me!