Train : தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊருக்கு போகனுமா.? இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது- ரிசர்வேஷன் தொடங்கியாச்சு

First Published | Jul 1, 2024, 6:42 AM IST

அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சொந்த ஊருக்கு செல்ல விரும்புவர்கள் ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது

தீபாவளி கொண்டாட்டம்

சொந்த ஊரில் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் வெளியூருக்கு பிழைப்புக்காக வந்தவர்கள் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். பண்டிகை காலத்தில் மட்டும் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு சென்று உறவினர்களோடு பண்டிகைகளை கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு செல்வார்கள். அந்த வகையில் ரயிலில் முன்பதிவு செய்தும், பேருந்தில் முன்பதிவு செய்தும் பயணம் மேற்கொள்வார்கள். 

diwali

தீபாவளி தொடர் விடுமுறை

பேருந்து பயணத்தை விட ரயில் பயணத்தையே பொதுமக்கள் பெரிதும் விரும்புவார்கள். பாதுகாப்பு மற்றும் குறைந்த கட்டணம் என்பதால் ரயிலில் பயணம் செய்ய கூட்டம் அலை மோதும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. தமிழக அரசு சார்பாக வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Tap to resize

train

முன்பதிவு தொடங்கியாச்சு

எனவே தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் சொந்த ஊருக்கு செல்ல லட்சக்கணக்கான பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. அதாவது 120 நாட்களுக்கு முன்பாக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. 

அடுத்தடுத்து நொறுங்கி விழும் பீகார் பாலங்கள்! 10 நாட்களுக்குள் 6வது சம்பவம்!

இன்றும் நாளையும் ரயிலில் முன்பதிவு

எனவே அக்டோபர் 28,29, 30 ஆகிய தேதிகளில் சொந்த ஊர்களுகூகு பயணம் செய்ய பலரும் திட்டமிடுவர். அதன்படி அக்.28ல் பயணம் செய்ய நேற்றும், அக் 29ம் தேதி பயணம் செய்ய இன்றும், அக்டோபர் 30ம் தேதி பயணம் செய்ய நாளையும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

காலியான டிக்கெட்

தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் செல்ல நேற்று முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களில் இடம் காலியாகிவிட்டது. 

Thiruvallur : போலீசார் மீது கல் வீச்சு.. தப்பியோடிய வடமாநிலத்தவர்கள்.. துப்பாக்கி முனையில் ஐவர் கைது!

இன்றும் ரிசர்வேஷன் செய்யலாம்

எனவே இன்றும் நாளையும் ரயில் முன்பதிவு செய்ய பொதுமக்கள் காத்திருந்துள்ளனர். குறிப்பாக  பெரும்பாலான பயணியர், இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றர். 

Latest Videos

click me!