இதெல்லாம் ரொம்ப தப்பு: அடிபட்டு செத்துருவ ப்ரோ - விஜய்க்கு எதிராக கொந்தளித்த சீமான்

First Published | Nov 2, 2024, 8:00 AM IST

திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று நடிகர் விஜய் குறிப்பிட்டிருந்த நிலையில், விஜய்க்கு எதிராக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Vijay and Seeman

தமிழக வெற்றி கழகத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய் அண்மையில் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டத்தை விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்தி முடித்தார். அப்போது பேசிய நடிகர் விஜய், திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.

TVK Vijay

அப்போது அவர் பேசுகையில், “நாங்கள் குட்டிக்கதை சொல்ல வந்தவர்கள் கிடையாது தம்பி. வரலாற்றை கற்பிக்கவந்தவர்கள். நீங்கள் இனிமேல் தான் அம்பேத்கர், பெரியார் எல்லாரையும் படிக்க வேண்டும். ஆனால் நாங்கள் இவர்களை படித்து பி.எச்.டி முடித்து அறிக்கை சமர்ப்பித்துவிட்டோம். சங்க இலக்கியத்தில் இலக்கியம் எங்கே இருக்கிறது என்று நீங்கள் இனிமேல் தான் தேட வேண்டும். ஆனால் சங்க இலக்கியங்களில் வருகின்ற பாண்டியன், நெடுஞ்செழியனின் பேரனும், பேத்தியும் நாங்கள்.

Tap to resize

Seeman

அண்ணனாவது, தம்பியாவது

இதயத்திலே நெறுப்பு எரிகிற போது சில பொறிகள் வாய் வழியே வந்து விழும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் என் இனம் தூக்கி சுமக்கின்ற வலியின் மொழி தான் எங்கள் மொழி. விடுதலை உரிமைக்கு பேசுவதற்கும், அடிமை உரிமைக்கு பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. எங்கள் லட்சியத்திற்கு எதிராக எங்களை பெற்றோரே வந்தாலும் எதிரி, எதிரி தான். அதில் அண்ணனும் கிடையாது, தம்பியும் கிடையாது.

Seeman

இது டிரைலர் தான் ப்ரோ

வேலுநாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலு நாச்சியார் யார் என்று சொல்லு தம்பி. ப்ரோ இது டிரைலர் தான் ப்ரோ, மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால் அடுத்து உங்கள் படம் பார்த்த பிறகு மெயின் பிக்சர் வரும். ஆவின் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுப்பேன் என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. கருப்பட்டிக்கு எப்படி பால் வரும்?

Politician Seeman

திராவிடமும், தமிழ் தேசியமும் எப்படி ஒன்றாக முடியும்? சாலையில் ஒன்று அந்த பக்கம் நிற்க வேண்டும். அல்லது இந்த பக்கம் நிற்க வேண்டும் நடுவில் நின்றால் லாரியில் அடிபட்டு செத்துவிடுவாய் தம்பி. அவர்கள் கூறியது கொள்கை அல்ல, கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை. இது சினிமாவில் வரக்கூடிய பஞ்ச் டயலாக் கிடையாது தம்பி, நெஞ்சு டயலாக் என்று விஜய்யை கடுமையாக சாடினார்.

Latest Videos

click me!