Government Employee: அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! போனஸ், டிஏ.வில் ஏதாவது டவுட்டா! உடனே இதை செக் பண்ணுங்க

Published : Nov 01, 2024, 10:03 PM ISTUpdated : Nov 02, 2024, 09:27 AM IST

Tamilnadu Government Employee: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை, செப்டம்பர் மாத ஊதியம் மற்றும் போனஸ் ஆகியவை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. களஞ்சியம் செயலியில் ஊதிய விவரங்களைச் சரிபார்க்கலாம்.

PREV
15
Government Employee: அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! போனஸ், டிஏ.வில் ஏதாவது டவுட்டா! உடனே இதை செக் பண்ணுங்க

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, பருவ மதிப்பெண்கள், அரசின் நலத்திட்ட உதவிகள், கலை திருவிழாக்களில் பங்கேற்பு, வெற்றியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது. 

25

இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் 'களஞ்சியம்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., டிரான்ஸ்பர் ஜாயினிங் என்ட்ரி, இ சலான் உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம், மருத்துவ காப்பீடு விவரம் என அனைத்து விவரங்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன.

35

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி ஏற்கனவே 50%ஆக இருந்த நிலையில் தற்போது 53% உயர்த்தப்பட்டதை அடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டிருந்தார். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். 

45

இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

55

இந்நிலையில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மூன்று மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையும், செப்டம்பர் மாதம் ஊதியமும் மற்றும் போனஸ் ஆகியவை 
ஒரே தொகையாக அரசு ஊழியர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் ஊதியத்தில் வித்தியாசம் ஏற்படலாம். இந்நிலையில் களஞ்சியம் செயலியில் அவரவர் அக்டோபர் மாத பே சிலிப்பை டவுன்லோட் செய்து ஊதியம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத்தொகை சரிபார்த்துக் கொள்ளலாம். அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கான CPS பிடித்தம் மற்றும் வருமானவரி தொகை பிடித்த மாற்றம் போன்றவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories