தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் நிறைவடைந்தது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையும், நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிபொழிவு நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மூடு பனி மற்றும் உறை பனி ஒருசில இடங்களில் நிலவுகிறது. அதாவது காலை நேரத்தில் பனியும் பிற்பகலில் கடுமையான வெயிலும் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மழை மற்றும் பனிபொழிவு குறித்தும் வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.
25
வடகிழக்கு பருவமழை இன்றுடன் நிறைவு
அதாவது வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று விலகியது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.
35
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
அதேபோல் ஜனவரி 22 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் 23 முதல் 25ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இன்று முதல் நாளை மறுநாள் வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று முதல் நாளை மறுநாள் வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு முதல் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
55
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.