தவெகவுக்கு 41% வாக்குகள்.. முதல்வராகிறார் விஜய்? புதிய சர்வே முடிவு.. அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின், இபிஎஸ்!

Published : May 02, 2026, 09:22 AM IST

TVK Vijay: தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்துள்ளன. ஆனால், ஆக்சிஸ் மை இந்தியா மற்றும் ஓய்வு பெற்ற காவல் ஆணையர் ரவியின் கருத்துக்கணிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தது. இதில், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி அதாவது நாளை மறுநாள் எண்ணப்படுகின்றது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் 29ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியானது.

24
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

அதில் பெருவாரியான கருத்து கணிப்புகள் திமுக இரண்டாவது முறையாக ஆட்சிமைக்கும் என தெரிவித்திருந்தது. அதாவது பீப்பிள்ஸ் இன்சைட், ரிபப்ளிக் - பி மார்க், மேட்ரிஸ், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் போன்றவைகள் திமுக ஆட்சி அமைக்கும் என்றும், ஜேவிசி டைம்ஸ் நவ் அதிமுக ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக விஜயின் தவெக 120 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பை வெளியிட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் முடிவுகள் எப்படி வரப்போகிறது என ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக பீதியில் இருந்து வருகின்றனர்.

34
தவெக 41% வாக்குகள்

இந்நிலையில் ஓய்வு பெற்ற தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி ஒரு பரபரப்பு கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 234 தொகுதிகளிலும் 2440 ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் 2.44 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் இதை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். அதில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 41% வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும், கிட்டத்தட்ட 121 தொகுதிகளை தவெக கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

44
திமுக, அதிமுக மாற்றாக விஜய்க்கு வாக்கு

ஏன் விஜய்க்கு வாக்களித்தீர்கள் என கேட்டபோது தனது வீட்டில் பேரக் குழைந்தைகள், மகன்கள், மகள்கள் விஜய்க்கு தான் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். காலம் காலமாக அதிமுக, திமுகவுக்கு வாக்களித்தவர்கள் கூட இந்த முறை விஜய்க்கு வாக்களித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கருத்து கணிப்புகள் வெளியானதை அடுத்து மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படி இருந்தாலும் மே 4ம் தேதி திங்கள் கிழமை காலை 12 மணிக்கு யார் ஆட்சியமைக்க போகிறார் என்ற உண்மை நிலவரம் தெரியவந்துவிடும்.

Read more Photos on
click me!

Recommended Stories