
பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்ததை அடுத்து கோடை விடுமுறையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் குளு குளு இடங்களுக்கு செல்ல வேண்டும் நினைவுக்கும் போது முதலில் நாம் ஞாபகத்துக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். அங்கு சென்றால் ஹோட்டல் கட்டணம், போக்குவரத்து செலவு என பட்ஜெட் எகிறிவிடும். ஆனால் உங்கள் பாக்கெட்டிற்கு சுமை தராத, அதே சமயம் ஊட்டிக்கே சவால் விடும் குளுமை கொண்ட 5 இடங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஜவ்வாது மலை, இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அழகிய மலைப்பிரதேசமாகும். கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான இது, நடுத்தர வர்க்கத்தினரின் 'பட்ஜெட் சுற்றுலா தலம்' என்று அழைக்கப்படுகிறது. ஜமுனாமரத்தூர் அருகிலுள்ள இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். குடும்பத்துடன் குளித்து மகிழலாம். அதுமட்டுமல்லாமல் ஜமுனாமரத்தூரில் ஒரு அழகான ஏரி உள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்காகப் படகு சவாரி வசதி செய்யப்பட்டுள்ளது. மலையின் குளுமையில் ஏரியில் பயணம் செய்வது ஒரு தனி சுகம். ஜவ்வாது மலை தனது பெயருக்கேற்றார் போல நறுமணம் மிக்க சந்தன மரங்களுக்குப் புகழ்பெற்றது. இங்கு வீசும் காற்றில் மூலிகை வாசம் கலந்திருக்கும் என்பதால், இங்கு செல்வது உடல் ஆரோக்கியத்திற்கும் மன அமைதிக்கும் நல்லது. உணவும் தங்குமிடமும் மிகக் குறைந்த விலையிலேயே கிடைக்கும்.
திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் மலைத்தொடரின் ஒரு பகுதியாக அமைந்துள்ள பன்றிமலை, இன்னமும் பலரால் அறியப்படாத ஒரு 'மர்மமான சொர்க்கம்' என்றே சொல்லலாம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை, அமைதியையும் இயற்கையையும் விரும்புவோருக்கு மிகச்சிறந்த தேர்வு. திண்டுக்கல்லில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. இம்மலையின் ஒரு பகுதி தூரத்தில் இருந்து பார்க்கும்போது 'பன்றி'யைப் போலவே தோற்றமளிப்பதாலும், முற்காலத்தில் இங்கு காட்டுப்பன்றிகள் அதிகம் காணப்பட்டதாலும் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. : கொடைக்கானலில் நிலவும் அதே சில்லென்ற காலநிலை இங்கும் உண்டு. ஆனால், கொடைக்கானல் அளவுக்கு மக்கள் கூட்டம் (Crowd) இருக்காது. தங்குமிடக் கட்டணம் மிகவும் குறைவு. மக்கள் கூட்டம் குறைவாக இருப்பதால், தனிமையை விரும்புவோருக்கு இது பெஸ்ட் சாய்ஸ். இங்கு அருவிகள், காபித் தோட்டங்கள் உள்ளன.
லைகளின் அழகையும் குளுமையையும் கொண்ட ஒரு மறைமுகச் சொர்க்கம். சுமார் 3,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை, தர்மபுரி மாவட்டத்தின் 'ஊட்டி' என்று அழைக்கப்படுகிறது. ஏலகிரி மலைக்குச் செல்லும் அதே உணர்வைத் தரும் இந்த மலைப் பயணம், வாகனப் பயணிகளுக்கு (Bikers) மிகவும் பிடிக்கும். இந்த மலைப்பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலை உச்சியில் இருந்து கீழே பார்க்கும்போது இந்த வளைவுகள் மிக அழகாகக் காட்சியளிக்கும். கோடை காலத்திலும் இங்கு இதமான குளுமை நிலவும். அதிகாலையில் மேகக்கூட்டங்கள் மலை முகடுகளைத் தொட்டுச் செல்வதைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இங்கு காபி, மிளகு, கடுகு மற்றும் பலாப்பழங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
ஓசூர் அருகே அமைந்துள்ள ஐயூர் சுற்றுச்சூழல் பூங்கா (Aiyur Eco-Park), இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய அற்புதமான இடமாகும். அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகள் மற்றும் வனவிலங்குகளின் புகலிடமாக இது திகழ்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது புகழ்பெற்ற காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாகும். ஐயூர் வனப்பகுதி யானைகளின் வழித்தடமாகும். மழைக்காலங்களில் இங்கு வரும் சிறிய அருவிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும். வனத்துறை பராமரிப்பில் உள்ள இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கக் கட்டணம் மிகக் குறைவு.
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பச்சைமலை (Pachaimalai), பெயருக்கேற்றார் போல எங்கு திரும்பினாலும் பசுமை போர்த்திய காட்சியுடன் உங்களை வரவேற்கும். கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான இது, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,500 முதல் 3,000 அடி உயரத்தில் உள்ளது. திருச்சியில் இருந்து 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ மிகவும் பாதுகாப்பான மற்றும் பிரபலமானது மங்களம், கோரையாறு அருவி. மங்களம் பகுதியில் வனத்துறையினரின் மர வீடுகள் உள்ளன. இதில் தங்குவது காட்டில் வாழும் உணர்வைத் தரும். பச்சைமலையில் பல அபூர்வ மூலிகைச் செடிகள் வளர்கின்றன. இங்கு வீசும் காற்றே ஆரோக்கியமானது என்று நம்பப்படுகிறது. மலைப் பிரதேச அனுபவத்தைப் பெற அதிகப் பணம் செலவழிக்க முடியாத நடுத்தரக் குடும்பங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.