2 நாளைக்கு கட்டணம் இல்லை.. கொடைக்கானல் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்.. முழு விபரம்!

Published : May 02, 2026, 08:52 AM IST

கொடைக்கானல் டூர் பிளான் பண்ணுறவர்களுக்கு இது ஒரு சூப்பர் சான்ஸ் கிடைத்துள்ளது. பிரபல சுற்றுலா இடங்களுக்கு எந்த நுழைவு கட்டணமும் இல்லாமல் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றிய முழுமையான விவரங்களை பார்க்கலாம்.

PREV
15
கொடைக்கானல் சுற்றுலா இடங்கள் இலவசம்

கோடைக்கானலுக்கு டூர் திட்டமிடுபவர்களுக்கு இப்போதே சரியான வாய்ப்பு வந்து விட்டது. மே 2 மற்றும் மே 3 ஆகிய இரண்டு நாட்களுக்கு, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள் அனைத்தும் இலவசமாக திறக்கப்பட்டுள்ளன. வழக்கமாக கட்டணம் வசூலிக்கப்படும் சில பிரபல ஸ்பாட்களை இந்த இரண்டு நாட்களில் எந்த செலவில்லாமல் ரசிக்கலாம் என்பது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் சலுகையாக பார்க்கப்படுகிறது.

25
கொடைக்கானல் சுற்றுலா

தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் போன்ற இடங்கள் இயற்கை அழகால் பெயர் பெற்றவை. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் அதிகமாக தேடும் ஹில் ஸ்டேஷன்களில் ஒன்றாக கொடைக்கானல் இருந்து வருகிறது. குளிர்ந்த காலநிலை, பசுமை நிறைந்த காடுகள், மலைகள் சூழ்ந்த காட்சிகள் ஆகியவை பயணிகளை மீண்டும் மீண்டும் இங்கு வர வைக்கும் முக்கிய காரணங்களாக உள்ளன.

35
கொடைக்கானல் இலவச நுழைவு

இந்நிலையில், சமீப காலமாக நடைமுறைக்கு வந்த ‘க்யூஆர் கோடு’ மூலம் ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் முறை சில சிக்கல்களை உருவாக்கியது. குறிப்பாக பசுமை பள்ளத்தாக்கு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

45
2 நாள் கட்டணமின்றி அனுமதி

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தற்காலிக தீர்வாக இரண்டு நாட்களுக்கு கட்டணத்தை முழுமையாக ரத்து செய்தது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் எளிதாகவும் விரைவாகவும் முக்கிய இடங்களை பார்வையிட முடியும். பயணிகளின் அனுபவத்தை சீராக வைத்திருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

55
சுற்றுலா பயணிகளுக்கு சலுகை

மேலும், பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையம், பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நேரடியாக டிக்கெட் வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 4 முதல் புதுப்பிக்கப்பட்ட ‘க்யூஆர்’ முறை சீரமைப்புடன் மீண்டும் அமலுக்கு வரும் என அதிகாரிகள் பதிவு செய்தனர். இந்த இரண்டு நாள் சலுகையை பயன்படுத்தி, செலவு இல்லாமல் கொடைக்கானலின் இயற்கை அழகை அனுபவிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories