தமிழகத்திற்கு குட் நியூஸ்! வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

Published : Jun 30, 2026, 11:36 PM IST

மகாராஷ்டிரா முதல் வடக்கு கேரளா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை மற்றும் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

PREV
15
காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகி இருந்தது. அதேபோல் நுங்கம்பாக்கத்தில் 101 டிகிரி வெளியில் சுட்டெரித்தது. இந்நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதாவது சராசரி கடல் மட்டத்தில் மகாராஷ்டிராவிலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரத்திலிருந்து 5.8 கிமீ உயரம் வரை வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் ஜூலை 3ம் தேதி வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளது.

25
40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று

இதன் காரணமாக இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

35
கனமழை எச்சரிக்கை

ஜூலை 4 கனமழை எச்சரிக்கை

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

ஜூலை 5 எந்தெந்த மாவட்டங்களில் மழை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

45
ஜூலை 6 லேசானது முதல் மிதமான மழை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

55
சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories