Chennai Power Cut: ஜூலை 1ம் தேதி தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை.. எத்தனை மணிநேரம்?

Published : Jun 30, 2026, 04:02 PM IST

Power Shutdown: மாதத்தின் முதல் நாளான ஜூலை 1ம் தேதி  தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

PREV
15
தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழகத்தில் கோடை வெயில் முடிந்த பிறகு வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 100 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து பகல் நேரங்களில் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அதுமட்டுமல்ல புழுக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டில் எந்நேரமும் ஃபேன், ஏசி உள்ளிட்டவைகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது.

25
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி

இந்நிலையில் தமிழக முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

35
ஜூலை 1மின்தடை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான லிஸ்ட் வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் அதாவது ஜூலை 1ம் தேதி தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்க்லாம்.

45
பெசன்ட் நகர்

7-வது அவென்யூ, ருக்மணி சாலையின் ஒரு பகுதி, டைகர் வரதாச்சாரி சாலையின் ஒரு பகுதி, கங்கை தெருவின் ஒரு பகுதி, அருண்டேல் கடற்கரைச் சாலையின் ஒரு பகுதி, எம்.ஜி.ஆர். சாலையின் ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் அடங்கும்.

55
கொட்டிவாக்கம்

சாஸ்திரி நகர், வால்மீகி நகர், 2வது சீவார்டு சாலை முதல் 4வது சீவார்டு சாலை வரை, பாலகிருஷ்ணன் சாலை, கே.கே. சாலை, ராஜா ரங்கசாமி அவென்யூ, சுப்பிரமணியம் அவென்யூ, .திருவள்ளுவர் நகர் 7வது முதல் 33வது குறுக்குத் தெருக்கள் வரை, திருவள்ளுவர் நகர் 1 மற்றும் 3 முதல் 6வது பிரதான சாலைகள் வரை, 1 மற்றும் 3வது அவென்யூ, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எச்12 முதல் எச்40 மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories