கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். "திருநெல்வேலிக்கும் மெட்ரோ ரயில் கொண்டு வருவேன் எனத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ஏன் தற்போது இது குறித்துத் தெரிவிக்கவில்லை?.
திட்ட அறிக்கையில் குளறுபடி: "கோவை மற்றும் மதுரை மெட்ரோவுக்கு இரண்டு மற்றும் மூன்று நிமிட வித்தியாசம் இருப்பதாகத் தமிழக அரசே ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தத் திட்டத்திற்கான அறிக்கையை மத்திய அரசுக்குத் தமிழக அரசு தவறாக வழங்கி உள்ளது என்று நான் பகிரங்கமாகச் சொல்வேன். மத்திய அரசு, மாநில அரசுக்கு 14ஆம் தேதியன்று அனுப்பிய கடிதத்தில், அந்த அறிக்கையைத் திருப்பி (DPR - Detailed Project Report) அனுப்பி இருக்கிறது. முதல்வர் ஏன் 15-ம் தேதி இந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதவில்லை? மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்?" என்று ஆவேசமாகப் பேசினார்.
மெட்ரோ உறுதிமொழி: "மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. திட்ட அறிக்கை மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 2026 ஜூன் மாதம் கண்டிப்பாக மெட்ரோ ரயில் கோயம்புத்தூர், மதுரைக்கு வந்துவிடும்," என்று உறுதியாகக் கூறினார்.