மிஸ் பண்ணாதீங்க! 10ம் வகுப்பு படித்தாலே லட்சம் லட்சமாக சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

Published : Nov 21, 2025, 08:32 AM IST

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் 5 நாட்கள் திருமண புகைப்படம், வீடியோ எடிட்டிங் பயிற்சியை வழங்குகிறது. இப்பயிற்சியில் புகைப்படம் எடுத்தல், வீடியோ எடிட்டிங் அரசு மானியங்கள் குறித்து விளக்கப்படும்.

PREV
14
தமிழ்நாடு அரசு

வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு சூப்பர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சொந்தமாக தொழில் தொடங்க பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதாவது பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, மூலப்பொருள் உபகரணங்கள், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி உள்ளிட்ட வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில், 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி வழங்கப்படுகிறது.

24
திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி

அதாவது தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி வரும் 01.12.2025 முதல் 05.12.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

34
ஆல்பம் வடிவமைப்பு

இப்பயிற்சியில் திருமண புகைப்படம் எடுத்தல் என்றால் என்ன, புகைப்படம் எடுத்தல் பற்றிய வரலாறு, புகைப்படத்தின் அடிப்படைகள், ஒளியமைப்பு, கலவை மற்றும் மேம்பட்ட புகைப்பட நுட்பங்கள் கவனம் செலுத்தும் முறைகள், திருமண புகைப்படம் எடுத்தல் என்றால் என்ன, பாரம்பரிய புகைப்படம் எடுத்தல் மேம்பட்ட நுட்பங்கள், நேர்மையான புகைப்படம் எடுத்தல் மேம்பட்ட நுட்பங்கள், திருமண உருவப்படங்கள் மேம்பட்ட நுட்பங்கள், உங்கள் குழுவை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல், உயர்நிலை புகைப்பட மறுசீரமைப்பு, ஆல்பம் வடிவமைப்பு, திருமணபுகைப்படக் கலைஞர் மற்றும் திருமணமாக எப்படி சம்பாதிப்பது புகைப்பட வணிகம், திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

44
குறைந்த வாடகையில் தங்கும் விடுதி

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032. 8668102600 / 9943685468. முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories