பயணிகளுக்கு ஷாக்.! நாகர்கோவில், கோட்டயம், நெல்லை தீபாவளி சிறப்பு ரயில் திடீர் ரத்து.! இது தான் காரணமா.?

Published : Oct 20, 2025, 12:01 PM IST

Diwali special trains cancellation : தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் நிலையில் சென்னை, கோட்டயம், நாகர்கோவில், மற்றும் திருநெல்வேலி மார்க்கங்களில் இயக்கப்பட்ட சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

PREV
14

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவகங்கள் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையையொட்டி சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை கொண்டாட பல லட்சம் மக்கள் சென்றுள்ளனர். 

பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில், பேருந்து, இயக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு சில ரயில்களில் மக்கள் கூட்டம் குறைவாக இருப்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

24

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில் எண் 06121: சென்னை சென்ட்ரல் - கோட்டயம் சிறப்பு ரயில், அக்டோபர் 22, 2025 அன்று மாலை 3:10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டியது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 06122: கோட்டயம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், அக்டோபர் 23, 2025 அன்று மாலை 2:05 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட வேண்டியது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

34

ரயில் எண் 06054: நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், அக்டோபர் 28, 2025 அன்று காலை 9:15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டியது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 06053: சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில், அக்டோபர் 29, 2025 அன்று அதிகாலை 4:15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டியது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

44

ரயில் எண் 06153: செங்கல்பட்டு - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில், அக்டோபர் 24 மற்றும் 26, 2025 ஆகிய தேதிகளில் மாலை 3:00 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட வேண்டியது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 06154: திருநெல்வேலி - செங்கல்பட்டு அதிவிரைவு சிறப்பு ரயில், அக்டோபர் 24 மற்றும் 26, 2025 ஆகிய தேதிகளில் அதிகாலை 4:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டியது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories