Published : Jul 29, 2025, 12:36 PM ISTUpdated : Jul 29, 2025, 12:59 PM IST
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட செவிலியர் நிமிஷா பிரியாவின் தண்டனை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் தண்டனை ரத்து செய்யப்பட்டதாக முதலில் அறிவித்திருந்த நிலையில் தற்போது பதிவை நீக்கியுள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா, செவிலியராக பணியாற்றிக்கொண்டிருந்துள்ளார். அதிக ஊதியத்திற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்கு சென்றார். அங்கு உரிய வருவாய் கிடைக்காததால், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக கிளினிக் ஆரம்பித்தது நடத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் செவிலியர் நிமிஷா பிரியாவிற்கும் அவரது பங்குதாரரான தலோல் அப்டோ மஹ்தி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பிரியாவிடம் இருந்து முழுமையாக கிளினிக்கை அபகரிக்க மஹ்தி முற்பட்டுள்ளார். மேலும் பிரியாவின் பாஸ்போர்ட்டையும் மஹ்தி பறித்துள்ளார். இதனால் சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் பிரியா தவித்துள்ளார்.
24
கொலை வழக்கில் நிமிஷா பிரியாவிற்கு தூக்கு
இதனால் மஹ்தியிடம் இருந்து பாஸ்போர்ட்டை எடுக்க மயக்க மருந்தை பிரியா கொடுத்துள்ளார். மயக்க மருந்து அதிகமாக செலுத்தியதால் மஹதி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஜூலை 14ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் தலையீட்டின் காரணமாக தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல் இருக்க ரத்த பணம் என்கிற முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று இரவு காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் பிரியா தூக்கு தண்டனை ரத்து என்ற தகவலை வெளியிட்டிருந்தார்.
34
தூக்து தண்டனை ஒத்திவைப்பு
இந்த தகவல் பிரியாவின் குடும்பத்தினர் உள்ளிட்ட இந்தியர்களை மகிழ்ச்சி அடைய செய்திருந்தது. இந்த சூழ்நிலையில் இந்த தகவலை கொல்லப்பட்ட மஹதியின் தம்பி மறுத்துள்ளார். யார் இந்த தகவலை கூறியது. தவறான தகவல் எனவு, பிரியாவின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு கடிதம் கொடுத்திருந்தார். இதனிடையே கேரளாவை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனைரத்து செய்யப்பட்டது என்ற செய்தியை காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் திரும்பப் பெற்றுக்கொண்டார். தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட செய்தி நீக்கப்பட்டது.
தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது என்ற செய்தியை காந்தபுரம் எக்ஸில் பகிர்ந்திருந்தார். காந்தபுரம் அலுவலகத்தை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனங்களும் வெளியிட்ட செய்தியைத்தான் அவர் பகிர்ந்திருந்தார். இந்த செய்திதான் தற்போது நீக்கப்பட்டுள்ளது. நிமிஷா பிரியாவின் மரண தள்ளிவைக்கப்பட்டது தொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து, காந்தபுரத்தின் தலையீடு தொடர்பனா தகவல்கள் வெளியானது.
இதற்கிடையில், தூக்குதண்டனை ரத்து செய்யப்படும் என்ற செய்தியை மத்திய அரசு உறுதிப்படுத்தவில்லை. மேலும் தகவல்கள் கிடைத்த பின்னர் பதிலளிக்கலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தூக்கு தண்டை ரத்து செய்யப்பட்டது என்ற செய்தி தவறானது என்று ஏமனில் உள்ள சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார்.
ஆனால், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படும் என்றும், இது தொடர்பாக ஏமனில் இருந்து உறுதிப்படுத்தல் கிடைத்துள்ளது என்றும் ஏமனில் உள்ள சூஃபி அறிஞரின் சீடரான ஜவாத் முஸ்தபாவி கூறினார்.