அண்ணன் இறந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்த அதிர்ச்சி!

Published : Aug 20, 2025, 11:49 AM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசு உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

PREV
13

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.தமிழரசு. இவர் திமுக எந்த பொறுப்பில் இல்லை என்றாலும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் போட்டியிட்ட தயாநிதி மாறனுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.

23

இந்நிலையில் சென்னையில் வசித்து வரும் மு.க.தமிழரசுக்கு தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக கடந்த ஜனவரி மாதம் அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மு.க.தமிழரசு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

33

கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து(77) உயிரிழந்தார். மு.க.முத்து சில படங்களில் நடித்த பிறகு அவர் திரையுலகில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அரசியலிலும் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories