Published : Apr 27, 2025, 05:03 PM ISTUpdated : Apr 27, 2025, 05:05 PM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள்(92) வயது மூப்பு காரணமான பொதுவெளியில் நிகழ்ச்சிகளை தவிர்த்து சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு வீட்டிலிருந்தே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்குச் சென்று தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
23
Apollo Hospital
இந்நிலையில் தயாளு அம்மாளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் 3ம் தேதியும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.