மு.க.ஸ்டாலினை கதறவிடும் தவெக வேட்பாளர்.. யார் இந்த வி.எஸ்.பாபு? அதிர வைக்கும் பின்னணி!

Published : May 04, 2026, 01:53 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில், நடிகர் விஜய்யின் தவெக கட்சி 100 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆளும் திமுக மற்றும் அதிமுகவுக்கு அதிர்ச்சி. குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலை.

PREV
15

தமிழக சட்டமன்ற தேர்தலில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுமாறிய தவெக பின்னர் தொடர்ந்து ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுகவை அலறவிட்டது. தற்போது நிலவரப்படி 100 தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் அதிமுக 72 தொகுதிகளிலும், திமுக 61 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. முதல் தேர்தலை சந்திக்கும் விஜய் இந்த அளவுக்கு பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

25

குறிப்பாக தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதியில் தவெக முன்னிலையில் இருந்து வருகிறது. திமுக துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முன்னிலையில் இருந்து வருகிறது. பெரும் எதிர்பார்க்கப்பட்ட மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார்.

35

தற்போதைய நிலவரப்படி மு.க.ஸ்டாலின் 37,049 வாக்குகளும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 45,073, அதிமுக சந்தான கிருஷ்ணன் 10,291 வாக்குள் பெற்றுள்ளார். 8,024 வாக்குகளுடன் ஸ்டாலின் பின்னடைவை சந்தித்து வருகிறார். இறுதி முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இருப்பினும் திமுக தலைவரும், முதல்வர் ஸ்டாலினை வி.எஸ்.பாபு பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

45

இந்நிலையில் வி.எஸ்.பாபு யார் என்பதை பார்க்கலாம். கடந்த தேர்தலில் ஸ்டாலினுக்காக கொளத்தூர் தொகுதியில் வேலை பார்த்தவர் வி.எஸ்.பாபு. புரசைவாக்கம் தொகுதியில் 2006 திமுக எம்எல்ஏ,வாகவும், வடசென்னை திமுக மாவட்ட செயலாளராக இருந்த வி.எஸ்.பாபு திமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு கொளத்தூரில் முதல்வரை எதிர்த்திருக்கிற வேட்பாளராக முன்னிலைப்படுத்தியது அதிமுக. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்துக்கு கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு சென்றபோது மாதவரத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை தன்னுடைய ஆதரவாளர்களை எடப்பாடி புகைப்படங்களுடன் பதாகைகளோடு நிறுத்தி வியக்க வைத்தார்.இப்படிப்பட்ட வி.எஸ்.பாபு திடீரென அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக திருமங்கலம் மோகன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தவெக இணைந்த அவருக்கு கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட விஜய் வாய்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

55

இப்படிப்பட்ட வி.எஸ்.பாபு திடீரென அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக திருமங்கலம் மோகன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தவெக இணைந்த அவருக்கு கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட விஜய் வாய்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories