MK Stalin Shaken by Election Setbacks:காலை முதலே உதிக்காத சூரியன் - தோல்வி பயத்தில் நடுங்கும் மு.க.ஸ்டாலின்!தமிழகமே எதிர்நோக்கி காத்திருந்த தேர்தல் வாக்கு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், திமுக கட்சி தொடர்ந்து, பின்னடைவையே சந்தித்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே பரபரப்பாக நடந்து வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பொய்யாக்கும் விதத்தில், தான் தற்போது வெளியாகும் தகவல்கள் அமைந்துள்ளது. குறிப்பாக திமுக கட்சியின் நிலைமை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கவலைக்குரியதாக உள்ளது.
24
தவெக கட்சி 109 இடங்களில் முன்னணியில் உள்ளது:
முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியதும், முன்னிலையில் இருந்த திமுக கட்சி பின்னர், தொடர்ந்து பின்னடைவை சந்திக்க துவங்கியது. தற்போதைய நிலவரப்படி, தளபதி விஜய் தலைமையில் 234 தொகுதிகளிலும் தேர்தலை சந்தித்த தவெக கட்சி 109 இடங்களில் முன்னணியில் உள்ளது. இது நிலையானது இல்லை என்றாலும்... தொடர்ந்து தவெக கட்சி முன்னணியில் இருப்பதால், தமிழகத்தில் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைக்க வாய்ப்புகள் அதிகம் என தொண்டர்கள் ஆரவாரம் செய்து வருகிறார்கள்.
34
முக கட்சி 57 இடங்களில் முன்னிலையில்
தமிழகத்தில் 68 இடங்களில் தற்போது முன்னிலை வகித்து வருகிறது எடப்பாடி தலைமையிலான அதிமுக கட்சி. திமுக கட்சி 57 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதில் இருந்து தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக கட்சி பல இடங்களில் பின்னடைவை சந்தித்திருக்கிறது. அதிகாரத்துக்கான களம் முற்றிலும் மாற்றம் அடைந்துள்ளது என்பதின் வெளிப்பாடே இந்த முடிவுகள். பொதுமக்கள் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, மற்றும் அடிப்படை சேவைகள் தொடர்பான கருத்துக்கள் வாக்காளர்களின் முடிவில் பிரதிபலிப்பதை காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
44
தோல்வி பயத்தை காட்டியுள்ளதா?
காலை முதலே உதய சூரியன் ஒரு பக்கம் உதிக்காத நிலையில், மற்றொரு புறம் திமுக ஸ்டாலின் அவரது தொகுதியிலேயே பின்னடைவை சந்தித்து வருவது, இவரது தோல்வி பயத்தை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. முக ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் பல நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். பெரும்பாலான நாட்களில் கொளத்தூர் பகுதிக்கு சென்று மக்களை சந்திப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் தவெக சார்பாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு முன்னிலையிலும், ஸ்டாலின் சுமார் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளது அரசியல் வட்டாரத்திலேயே பேசுபொருளாக மாறியுள்ளது.