முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அமைச்சராக உயர்ந்தவர் பி.கே.சேகர்பாபு. சமீபத்தில் லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலினை, அங்கு படித்து வரும் சேகர்பாபுவின் மகன் ஜெயசிம்மன் சந்தித்து புத்தகம் பரிசளித்தார்.
தமிழக அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருப்பவர் பி.கே.சேகர்பாபு தனது அரசியல் வாழ்க்கையை அதிமுகவில் தொடங்கியவர், அக்கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளராகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். வட சென்னை பகுதிகளில் பல பிரம்மாண்ட விழாக்களை நடத்தி அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம்பிடித்திருந்தார்.
ஒரு கட்டத்தில் திமுகவுடன் ரகசிய தொடர்பு மூலம் பிசினஸ் செய்வதாக கிடைத்த தகவலையடுத்து சேகர்பாபு கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதனையடுத்து அதிமுகவில் இருந்து விலகிய சேகர்பாபு 2011 ஆம் ஆண்டு தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். அப்போது முதல் வட சென்னையில் திமுகவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறார்.
25
வட சென்னையில் சேகர்பாபு
பணத்தை தண்ணீர் போல் செலவு செய்து திமுகவினரை வாய் அடைக்க செய்தார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்பது போல் கட்சிப் பணியை சுறு சுறுப்பாக முடித்து அசத்தினார். ஜெயலலிதாவின் குட் புக்கில் இருந்த சேகர்பாபு திமுக தலைவராக இருந்த கருணாநிதி மற்றும் ஸ்டாலினிடமும் நல்ல பெயர் பெற்றார்.
திமுகவிற்கு வந்த சில வருடங்களில் வட சென்னை முழுவதும் சேகர்பாபுவின் கட்டுப்பாட்டில் வந்தது. எடுத்த காரியத்தை முடிக்கும் வரை பம்பரமாக சுழன்று பணியாற்றி வந்த சேகர் பாபு தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் முதலாமானவர்.
35
சேகர்பாபு செயல்பாபு - முதலமைச்சர் ஸ்டாலின்
மற்ற அமைச்சர்களே சேகர்பாபுவை பார்த்து போறாமை படும் வகையில் ஸ்டாலின் 100க்கு 100 மதிப்பெண் கொடுத்துள்ளார். அமைச்சர் சேகர் பாபுவை செயல்பாபு என பலமுறை பாராட்டி பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர் மீது தனிப்பட்ட முறையில் நன்மதிப்பை வைத்திருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்திற்கும் மிகவும் விசுவாசமான நபராக சேகர்பாபு உள்ளார்.
சேகர்பாபுவிற்கு பி.எஸ்.விக்னேஷ், பி.எஸ்.ஜெயகல்யாணி பி.எஸ்.ஜெயசிம்மன் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளார். அதில் ஜெயசிம்மன் மூன்றாவது மகன் லண்டனில் உயர் படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த வாரம் லண்டன் மற்றும் ஜெர்மனி பயணம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு தொழில்முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழத்திற்கு தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள லண்டன் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர் சேகர்பாபுவின் மகன் ஜெயசிம்மன் சந்தித்து பேசினார்.
55
நலம் விசாரித்த துர்கா ஸ்டாலின்
அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜெயசிம்மன் புத்தகம் பரிசளித்தார். அதனை வாஞ்சையோடு பெற்று அன்பாக நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினும் ஜெயசிம்மனின் படிப்பு தொடர்பாக கேட்டறிந்து உடல் நலம் தொடர்பாக விசாரித்தவர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.