பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

Published : Jan 12, 2025, 09:45 AM IST

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 11ஆம் தேதி நிலவரப்படி, 1 கோடியே 47 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

PREV
15
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
Pongal Gift Package

பொங்கல் கொண்டாட்டம்

தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும். உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.  

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. 

25

பொங்கல் பரிசு தொகுப்பு

இந்த நிலையில் இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை. மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை. அதே நேரத்தில் இலவசமாக வேட்டி, சேலை, பச்சரிசி, சக்கரை மற்றும் முழுக்கரும்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் தொகுப்பு கடந்த 9ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

35

திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும்"   எனவும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் என அறிவித்தார்கள்.

45

50ஆயிரம் பணியாளர்கள்

அதன்படி. கடந்த 09.01.2025 அன்று  சைதாப்பேட்டை-11 நியாயவிலைக் கடையில்  தமிழ்நாடு முதலமைச்சர் அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 50.000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

55

67 சதவிகிதம் விநியோகம்

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி. 11.01.2025 வரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 47 லட்சத்து 07 ஆயிரத்து 584 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 67 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என  கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்கள்

Read more Photos on
click me!

Recommended Stories