அரசு பள்ளிகளுக்கு ஜாக்பாட்.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள்

First Published | Jan 12, 2025, 8:34 AM IST

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதில் அரசு பள்ளிகளின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் தமிழகத்தில் 100 ஆண்டுகளைக் கடந்த 2,238 அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாட உள்ளது. 

Centenary of Government Schools

மாணவர்களும் அரசு பள்ளிகளும்

கல்வி தான் ஒரு மனிதனை முழுமையாக மாற்றும், நவீன காலத்திற்கு ஏற்ப கல்வியின் வளர்ச்சி உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில் மாதா, பிதா குரு என பாடங்களை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு பள்ளிகள் முக்கிய காரணமாக அமைகிறது. ஒவ்வொருவருக்கும் பாடங்களை கற்றுக்கொடுக்கும் பள்ளிகளை மறக்க முடியாது.  அந்த வகையில் தாங்கள் படித்த பள்ளிகளை பார்ப்பது, படித்த வகுப்பறையை பார்ப்பதும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

school student

நூற்றாண்டை கடந்த அரசு பள்ளிகள்

இந்த நிலையில் அரசு பள்ளிகளை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு சிறப்பாக திட்டங்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இதில்  2,238 அரசுப் பள்ளிகள் 100 ஆண்டுகளைக் கடந்து மக்களின் நம்பிக்கைக்கு உரியவையாகத் திகழ்ந்து வருகிறது. இந்த பழமையான பெருமைக்குரிய அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டைக் கொண்டாடுவதன் வாயிலாக, பெற்றோருக்கும், மக்களுக்கும் அரசுப் பள்ளிகள் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Government Schools

பள்ளிகள் நூற்றாண்டு விழா

மேலும் பள்ளிகளுக்கு நூற்றாண்டு விழா நடத்துவதால் மாணவர்களுக்கு உத்வேகமும், ஆசிரியர்களுக்கு உந்துதலும் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டு விழா  பள்ளிகளின் வரலாற்று பதிவாகவும், உட்கட்டமைப்பு மேம்பாடு, பராமரிப்பு போன்ற தேவைகளை சமூகப் பங்கேற்போடு உறுதிசெய்யவும் வாய்ப்பாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த அரசு பள்ளியான திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரும் 22-ம் தேதி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷால் தொடங்கிவைக்கப்பட உள்ளது. 

Centenary of Government Schools

பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

இதனை தொடர்ந்து 23-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நூறாண்டு கடந்த அரசுப் பள்ளிகளிலும், பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடப் பரிந்துரைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளின் நூற்றாண்டு விழாவை ஆண்டு தோறும் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாவோடு இணைத்து கொண்டாடுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!