சென்னையை காலி செய்த மக்கள்.! ஒரே நாளில் இத்தனை லட்சம் பேர் வெளியூர் பயணமா.?

First Published | Jan 12, 2025, 9:04 AM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Pongal Celebration

பொங்கல் கொண்டாட்டம்

படித்த படிப்பிற்கும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் வெளியூருக்கு வேலை தேடி செல்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு பேருந்து மற்றும் ரயில்கள் மூலமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள். அவர்களுக்கு இருக்க இடம் கொடுத்தும், குடும்பத்தை காப்பாற்ற  வேலை கொடுத்தும் அரவணைக்கிறது சென்னை. அந்த வகையில் தொடர் விடுமுறை, விஷேச நாட்களில் மட்டுமே சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள்.

Chennai bus

சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கம்

அந்த வகையில் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்றால் கூட்டம் கூட்டமாக படையெடுப்பார்கள். அந்த வகையில் இந்தாண்டு எப்போதும் இல்லாத வகையில் பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 6 முதல் 9 நாட்கள் வரை விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து பல லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கியுள்ளனர்.

ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்து விட்ட நிலையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 10ஆம் தேதி இரவு முதல் பொங்கல் பண்டிகை தினம் வரை 21,904 சிறப்பு பேருந்துகள் இயக்கபடவுள்ளது.  

Tap to resize

kilambakkam

44ஆயிரம் பேருந்துகள் இயக்கம்

அதேபோல பொங்கலை கொண்டாடி விட்டு திரும்பும் மக்களின் வசதிக்காக 22,676 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக பொது மக்கள் வசதிக்காக 44,580 பேருந்துகள் இயக்கபட உள்ளது. இந்த நிலையில் நாள் தோறும் பல லட்சம் மக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கியுள்ளனர். கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்லும் வகையில் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Kilambakkam

4 லட்சம் பேர் வெளியூர் பயணம்

இந்த நிலையில் தற்போது வரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கடந்த 2 நாட்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல்  திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (11/01/2025)  நள்ளிரவு 24.00  மணி நிலவரப்படி,

setc bus

இத்தனை லட்சம் பேர் பயணம்

வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும் 2,015 சிறப்புப் பேருந்துகளும் ஆக 4107 பேருந்துகளில் 2,25,885 பயணிகள் பயணம்செய்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10/01/2025 முதல் 11/01/2025 இரவு 24.00 மணி வரை7,513பேருந்துகளில் 4,13,215 பயணிகள் பயணித்துள்ளனர் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் ஆம்னி பேருந்துகள், ரயில்களின் மூலமாகவும் சொந்த காரிகளின் மூலமாகவும் பல லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். 

Latest Videos

click me!