தமிழகத்தில் மினி பேருந்து.! எப்போது தொடங்குகிறது.? கட்டணம் இவ்வளவு தானா.?

Published : May 09, 2025, 07:37 PM IST

தமிழகத்தில் 1,842 புதிய மினி பேருந்துகள் ஜூன் 15 முதல் இயக்கப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறுகிய தூர பயணங்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும். கூடுதல் கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

PREV
14
தமிழகத்தில் மினி பேருந்து.! எப்போது தொடங்குகிறது.? கட்டணம் இவ்வளவு தானா.?
தமிழ்நாடு மினி பேருந்து

தமிழகத்தில் அரசு பேருந்து சேவை மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அந்த வகையில் குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று சேரமுடியும். இந்த நிலையில் குறுகிய இடத்திற்குள் பேருந்து செல்ல முடியாத மற்றும் குறைவான மக்கள் பயன்படுத்தும் பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் படி,  புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கை தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டது. 
 

24
சென்னையில் எந்த பகுதியில் மினி பேருந்து

அதன்படி, பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மினி பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலிக்கவும் அனுமதி வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.  

போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கிமீ கூடுதலாக இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.  இதில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் மினி பேருந்து விதிகளை தமிழக அரசு இறுதி செய்துள்ளது.

34
ஜூன் 15 ஆம் தேதி முதல் மினி பேருந்து

 இதன்படி, 23 கருத்துகளுக்கு பதில் அளித்து, இறுதி விதிகள் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த அரசிதழ் படி இந்த திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக, 1,842 புதிய மினி பஸ்கள் சேவை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார். இதன்படி, இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

44
மினி பேருந்துக்கு கட்டணம் எவ்வளவு.?

மேலும், கூடுதலாக 6 கிலோ மீட்டருக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட விதிகளின் 18 முதல் 20 கி.மீ வரை 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது, 20 முதல் 22 கி.மீ வரை 10 ரூபாயும், 22 முதல் 26 வரை 11 ரூபாயும் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories