Published : May 09, 2025, 05:13 PM ISTUpdated : May 09, 2025, 05:17 PM IST
இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரிப்பால் ஐபிஎல் போட்டி ரத்து. சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட மோதல் அதிகரித்துள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் அலுவலகம், பயிற்சி மையம், ஆயுத சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை குறிவைத்து தாக்கியது. இதில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியா மீது ஏவுகனை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தினர். இதனை நடுவானில் இந்தியாவின் வான் பாதுகாப்பு கவசம் தாக்கி அழித்தது.
23
ஐபிஎல் போட்டி ஒரு வாரத்திற்கு ரத்து
இந்த பரபரபான சூழ்நிலை காரணமாக நேற்று தர்மசாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டது. பாதியில் போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாகிஸ்தான் மின்னஞ்சல் போல் உருவாக்கப்பட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
33
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடி குண்டு மிரட்டல்
அதில், சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்களும் வெளியாகி உள்ளது. சென்னையில் முக்கியமான மைதானமாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது சென்னை அணி வீரர்கள் மைதானத்தில் பயிற்சி எடுத்து வரும் நிலையில் இந்த இமெயில் பதற்றத்தை உருவாகியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்