நடிகர் விஷாலின் நட்சத்திர திருவிழாவிற்கு தடை விதிங்க.! களத்தில் இறங்கிய வேல்முருகன்- காரணம் என்ன.?

Published : May 09, 2025, 03:26 PM ISTUpdated : May 09, 2025, 03:27 PM IST

மே 18ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் நட்சத்திர கலைவிழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். 

PREV
14
நடிகர் விஷாலின் நட்சத்திர திருவிழாவிற்கு தடை விதிங்க.! களத்தில் இறங்கிய வேல்முருகன்- காரணம் என்ன.?
கன்னியாகுமரியில் நடிகர்களின் நட்சத்திர திருவிழா

கன்னியாகுமரியில் வருகிற மே 18ஆம் தேதி நடைபெறவுள்ள நட்சத்திர கலைவிழாவை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளளது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 2009ஆம் ஆண்டு, தனி ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி தமிழீழ அமைப்பினருக்கும், சிங்கள பௌத்தவ பேரினவாத அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றது. சிங்களப் பேரினவாத அரசின் அறமற்ற அப்போரில் சுமார் 2.25 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 40 ஆயிரம் மாவீரர்கள் கொலை செய்யப்பட்டனர்.

24
மே 18ஆம் தேதி துக்க நாள்

அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்  துணைக்கொண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட மே 18ஆம் தேதியை, ஆண்டுந்தோறும் தமிழின அழிப்பு செய்த கருப்பு நாளாக தமிழிழீ தமிழர்கள் மட்டுமின்றி, உலகெங்கும் பரவி வாழும் ஒட்டுமொத்த தமிழர்கள் அனுசரித்து வருகின்றனர்.

குறிப்பாக, மே 18ஆம் தேதி அன்று, தமிழ்நாட்டில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும், துக்க நாளை அனுசரிப்பதோடு, வீரமரணம் அடைந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாகும்.

34
விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர விழா

இச்சூழலில், கன்னியாகுமரி சிவந்தி ஆதித்தனார் கல்லூரி திடலில், நடிகர் விஷால் உள்ளிட்ட தமிழ் திரைப்பட நடிகர்களை வைத்து, மே 18 அன்று நட்சத்திர இசைத்திருவிழாவை நடத்த இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மே 18 அன்று, ஒட்டுமொத்த தமிழர்களும் துக்க நாளை அனுசரித்து, தமிழிழீ போரில் உயிரிழந்த போராளிகள் மற்றும் தமிழிழீ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிலையில், அந்நாளை இசைத்திருவிழாவின் வாயிலாக கொண்டாட்ட நாளாக மாற்ற முயலுவது ஏற்புடையது அல்ல.

44
நட்சத்திர விழாவிற்கு தடை

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து மே 18ஆம் நாளை தமிழ் இனப்படுகொலை நாளாக அறிவித்து, அதனை கனடா அரசு அனுசரித்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அன்றைய நாளில் கொண்டாட்ட நிகழ்வை நடத்துவது வன்மையாக கண்டிக்கதக்கது. எனவே, உலகத் தமிழர்களின் துக்க நாளான 18ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் நடக்கும் நட்சத்திர இசைத் திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக வேல்முருகன் கூறியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories