இயக்குனர், ஒளிப்பதிவாளராக சூப்பர் வாய்ப்பு.! திரைத்துறையில் கலக்க அரசு அளிக்கும் அசத்தல் சான்ஸ்!

Published : Jul 23, 2025, 11:10 AM IST

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை காட்சி கலைப் பட்டப்படிப்புகளில் சில காலியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. 

PREV
14
தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்

சினிமா மக்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக தற்போதைய காலக்கட்டத்தில் மாறியுள்ளது. தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. இது தமிழக அரசு நிறுவனமாகும். திரைப்படத் துறையில் மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளிப்பதும், தொலைக்காட்சி பற்றிய விரிவான விளக்கங்களை வழங்கி பயிற்சிகள் வழங்குவதும் இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக திகழ்கிறது. இந்நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

24
திரைப்பட கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை

அதில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) , சென்னை 600 113ல் 2025-2026ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை காட்சி கலைப் பட்டப்படிப்புகளுக்கான வழக்கமான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது, அதில் கீழ்க்காணும் பிரிவுகளில் இடஒதுக்கீட்டு சுற்றுக்காக சில காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

34
இளங்கலை பட்டப்படிப்புகள் என்ன.?

* ஒளிப்பதிவு (Cinematography) 2 (SC/ST - 1, MBC/DNC – 1)

* எண்மிய இடைநிலை (Digital Intermediate) 10 (7.5% Govt. School – 1,MBC/DNC-2, BC - 3, OC- 2, Other State – 1, SIFCC * - 1)

* ஒலிப்பதிவு (Audiography) 9 (7.5% Govt. School - 1,MBC/DNC -1, BC- 3, OC- 3,SIFCC * - 1)

* படத்தொகுப்பு (Film Editing) 2 (BC)

* உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் (Animation and Visual Effects) 2 (MBC/DNC -1, BC-1 )

விண்ணப்பதாரரின் தந்தை அல்லது தாய் திரைப்படத்துறையை சார்ந்தவர் என்பதற்கு சான்றிதழ் அளிக்கும் வகையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சங்கம் (SIFCC) அளிக்கும் சான்றிதழ் அவரது விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

44
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

ஜூலை 2323.07.2025 முதல் www.filminstitute.tn.gov.in எனும் இணையதளத்தில், மாணவர் சேர்க்கைக்கான படிவத்தினை, பயனாளர் கையேட்டின்(User Manual) அறிவுறுத்தலின்படி பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணத்தினை செலுத்தி பதிவு செய்தும், அனைத்து உரிய ஆவணங்களையும் 30.07.2025 மாலை 05.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories