வெயிலுக்கு டப் கொடுக்க மழை கொட்டப்போகுது.! தேதி குறித்த வானிலை ஆய்வாளர்!

First Published | Sep 20, 2024, 2:21 PM IST

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் அதிகரித்த வெப்பத்திற்கான காரணங்கள் மற்றும் மழைக்கான அறிகுறிகள் குறித்து வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கான விரிவான வானிலை முன்னறிவிப்பு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை பற்றி அறிய படிக்கவும்.

heat wave

அதிகரிக்கும் வெப்பம்

தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடிங்கி கிடக்கின்றனர். ஏப்ரல், மே மாத வெப்பத்தை விட தற்போது அனல் காற்று அதிகமாக வீசி வருகிறது. இதனால் இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மேற்கு திசையில் இருந்து வீசும் தரைக்காற்று வெப்பமாக இருப்பதன் காரணமாகவே தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருவதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

22 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெயில் பதிவாகி உள்ளதாக கூறினர். இந்தநிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 

ஒரு சில இடங்களில் மழை

இதன் படி, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலையை பொறுத்த வரை அதிகபட்ச வெப்பநிலையாக  மதுரை விமான நிலையம்: 39.7 ° செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை: ஈரோடு: 19.6 செல்சியஸ் பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை (20.09.2024, 21.09.2024) தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22.09.2024 முதல் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

அதிகரிக்கும் வெப்பம்

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2"-4" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கப்படும்.? கெடு விதித்த அரசு- அப்டேட் செய்ய என்ன செய்ய வேண்டும்
 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

20.09.2024 முதல் 24.09.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

20.09.2024 முதல் 23.09.2024 வரை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24,09,2024: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

rain kerala

தமிழகத்தில் மழை எப்போது பெய்யும்

இதனிடையே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது. இந்தநிலையில் வெயிலின் தாக்கம் எப்போது குறையும். மழை எப்போது பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், தமிழிகத்தில் செப்டம்பர் மாதத்தில் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளாதக தெரிவித்துள்ளார்.

எனவே இந்த வெயிலின் உக்கிரம் செப்டம்பர் கடைசி வாரத்தில் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.  இலங்கை அருகே மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் அதிக மழை பெய்யும் என கூறியுள்ளார். 
 

Latest Videos

click me!