தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு அரசும், ஆணையமும் மேகதாது அணையைக் கட்ட முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதையே திரும்பத் திரும்பப் பேசுவது ஏன் என்றும் கூறினார்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கடந்த நவம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கருத்துகள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.