TVK Vijay: கோட்டையை நோக்கி விஜய்.. தவெக-வின் இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னால் இருப்பது யார் தெரியுமா? வெளியான தகவல்

Published : May 04, 2026, 05:15 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்றியை தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ளது. அதாவது ஆட்சிக்கு தேவையான 118 இடங்களை நெருங்கி வருகிறது. இந்த வெற்றிக்கு பின்னால் யார் இருப்பது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
15

தவெக தலைவர் விஜய் வருகையால் தமிழக அரசியல் எப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் 85 சதவீதம் வாக்கு பதிவானதை அடுத்து திமுக, அதிமுக ஒரு வித பீதியில் இருந்து வந்தனர். இந்நிலையில் ஏப்ரல் 23ம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டது. ஆரம்பம் முதலே தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது.

25

தற்போதைய நிலவரப்படி தவெக 107 இடங்களிலும், ஆளும் திமுக அரசு 74 இடங்களிலும், அதிமுக 53 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட தவெக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ள நிலையில் மெஜாரிட்டிக்கு 118 தேவை என்பதால் அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தவெக வெற்றிக்கு அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி என்பதை பார்க்கலாம்.

35

யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?

ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்டவர் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சி ஜெயிண்ட் சோஜப் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னை லயோலா கல்லூரியில் தொழில் மேலாண்மை (Management) படிப்பை முடித்தார். தனது தொழில்முறை வாழ்க்கையை மக்கள் தொடர்புத் துறையில் (PR) தொடங்கினார். Perfect Relations நிறுவனத்தில் 4 ஆண்டுகளும், Good Relations India நிறுவனத்தில் இயக்குநராக 12 ஆண்டுகளும் பணியாற்றி அனுபவம் பெற்றார். பின்னர், 2017 முதல் Persona Leadership Advisory மற்றும் JPAC Persona ஆகிய நிறுவனங்களின் மூலம் தேர்தல் வியூக வகுப்பாளராக உருவெடுத்தார்.

45

வெறும் விளம்பரம் மட்டுமல்லாது, ஒரு தலைவருக்கான "பிம்பத்தை" (Image Branding) கட்டமைப்பதில் ஜான் ஆரோக்கியசாமி வல்லவர். பாமகவின் 'மாற்றம்.. முன்னேற்றம்.. அன்புமணி': 2016-ல் அன்புமணி ராமதாஸை ஒரு நவீனத் தலைவராக முன்னிறுத்திய அந்தப் பிரபலமான முழக்கத்திற்குச் சொந்தக்காரர் இவரே. 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2017 மும்பை மாநகராட்சித் தேர்தல்களில் சிவசேனா கட்சிக்கு ஆலோசகராகப் பணியாற்றினார்.

55

2018-ல் தற்போதைய முதல்வர் சித்தராமையாவின் ஆலோசனைக் குழுவோடு இணைந்து கர்நாடகத் தேர்தலில் களம் கண்டார். தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி களம் இறங்கி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories