கோவில்பட்டி டி மார்ட்டில் கடும் கூட்ட நெரிசல்..! மளிகைப் பொருட்களை வாங்க மக்கள் அலைமோதியதால் பரபரப்பு

Published : Dec 17, 2025, 08:56 AM IST

கோவில்பட்டியில் சமீபத்தில் திறக்கப்பட்ட டிமார்ட் கடைக்கு திருவிழா போல மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
14
கோவில்பட்டி டிமார்ட்

கோவில்பட்டியில் டிமார்ட் வந்தாச்சு, எல்லாரும் வாங்கன்னு சொல்லாத குறை மட்டுமே. ஒட்டுமொத்த கோவில்பட்டி மக்களுமே டிமார்ட் கடையில் குவிந்து உள்ளதுதான் தற்போதைய வைரல் டாபிக். சமீபத்தில் திறக்கப்பட்ட டிமார்ட் திறப்பு நாள் முதல் அங்கு ஏற்பட்ட மக்கள் கூட்டம், ஒரு வணிக வளாகத்துக்கான வரவேற்பா அல்லது ஒரு திருவிழாவுக்கான திரண்ட வருகையா என்ற அளவுக்கு இருந்தது. கடைக்குள் நுழைய நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள், பொறுமையுடன் உள்ளே சென்று வாங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

24
டிமார்ட் கூட்ட நெரிசல்

இந்தக் காட்சிகளைப் பார்த்த பலரும், “இவ்வளவு கூட்டம் டிமார்ட் கடைக்கு தேவையா?” என்ற கேள்வியை எழுப்பினர். தமிழ்நாட்டின் பல நகரங்களில் டிமார்ட் சிறப்பாக வந்தாலும், கோவில்பட்டியில் காணப்பட்ட அளவிலான நெரிசல் அரிதானது என்றுதான் கூற வேண்டும். மதுரை போன்ற பெரிய நகரங்களுடன் ஒப்பிட்டால் கூட, கோவில்பட்டி மக்கள் காட்டிய ஆர்வம் வியாபார உலகில் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக மாறியுள்ளது. குறைந்த விலை, ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கும், 'ஆஃபர்' என்ற வார்த்தையின் ஈர்ப்பு ஆகியவை மக்களை திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

34
கோவில்பட்டி ஷாப்பிங்

இந்த அளவிலான வரவேற்பை பார்த்த டிமார்ட் நிர்வாகமே ஆச்சரியப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம் உள்ளது. டி மார்ட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் எங்கும் கிடைக்காத அபூர்வமான பொருட்கள் அல்ல. அன்றாடம் நம் நகரின் சிறு கடைகளிலும், மளிகை கடைகளிலும் கிடைக்கும் பொருட்களே பெரும்பாலும் அங்கு விற்கப்படுகின்றன.

44
கோவில்பட்டி

கோவில்பட்டியின் பொருளாதாரம் சிறு, குறு வியாபாரிகளை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. பல குடும்பங்கள் தினசரி வருமானத்திற்காக நம்பி இருப்பது இந்த உள்ளூர் கடைகளே. வியாபாரம் ஒரே பெரிய நிறுவனத்தில் குவிந்தால், சிறு வியாபாரிகளின் வருமானம் குறையும்; அது வேலைவாய்ப்புக்கும், நகரின் பொருளாதார சுழற்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இது ஒரு நாள், இரண்டு நாள் பிரச்சனை அல்ல. பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மாற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories