தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 23-ல் முடிவடையும் நிலையில், விடுமுறை நாட்கள் குறித்த குழப்பம் நிலவியது. தற்போது, விடுமுறையை நீட்டித்து, ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18 முதல் 26ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெற்றது. பின்னர் காலாண்டு தேர்வு விடுமுறை செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை அதாவது மொத்தம் 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 23ம் தேதி முடிவடைகிறது.
24
அரையாண்டு தேர்வு விடுமுறை
இதனை தொடர்ந்து டிசம்பர் 24ம் தேதி புதன் கிழமை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை வருகிறது. முதலில் அரையாண்டு தேர்வு விடுமுறை 9 நாட்கள் மட்டுமே என கூறப்பட்டு வந்தது. அதாவது டிசம்பர் 24-ம் தேதி முதல் 2026 ஜனவரி 1-ம் தேதி வரை மட்டுமே விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல் வெளியானது. அதேபோல அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 2-ம் தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
34
பள்ளிக்கல்வித்துறை
எனினும் பள்ளி நாட்காட்டியில் புத்தாண்டு மற்றும் வார விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே பள்ளிகள் திறக்கப்படுவதாக கூறப்பட்டது. மழை காரணமாக பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அதாவது பள்ளி ஆண்டு நாட்காட்டியில் ஏற்கெனவே கூறியபடி ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்க உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர். இந்த 12 நாட்கள் விடுமுறையில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.