Edappadi Palanisamy Dinner Party To AIADMK MLAs: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. இதில், மேலும் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளது. இந்நிலையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவு பெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி பசுமை வழிச்சாலை வீட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று இரவு விருந்து அளித்துள்ளார். இதில், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வருவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு என ஆறு வகை அவைச உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டுள்ளது.