சொந்த மாவட்டத்திலே பொன்முடிக்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுக.! அதுவும் இப்படிலாமா கிண்டலடிப்பது

Published : Apr 23, 2025, 02:39 PM IST

திமுக அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மகளிர் அணி நூதன போராட்டம் நடத்தியது. மஞ்சள் நிற முடியை அணிந்துகொண்டு, அமைச்சர் பொன்முடியை கிண்டல் செய்யும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

PREV
14
சொந்த மாவட்டத்திலே பொன்முடிக்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுக.! அதுவும் இப்படிலாமா கிண்டலடிப்பது

Ponmudi controversy AIADMK protest : திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவர் பொன்முடி, இவர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் விடியல் பயண திட்டத்தை ஓசி டிக்கெட் என கூறினார். ஆதி திராவிட பெண் ஒருவரை ஜாதியை சொல்லி அழைத்தார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,  சைவ வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமாக பேசியிருந்தார்.

24
Ponmudi controversy

போராட்டம் நடத்த இபிஎஸ் உத்தரவு

இந்த பேச்சு சமூகவலைதளத்தில் பரவிய நிலையில், பொன்முடிக்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தது. இதனையடுத்து திமுகவின் முக்கிய பதவியான துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

34
ADMK protest

விழுப்புரத்தில் மகளிர் அணியினர் போராட்டம்

இதனையேற்று பல்வேறு மாவட்டங்களில் அதிமுக மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் , மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம்  அறிவுறுத்தலின் பேரில்  பெண்களை பற்றியும் சைவ, வைணவ சமயங்களை பற்றியும் இழிவாக பேசித திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து  விழுப்புரத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.  போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மகளிர் அணியினர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும்,

44
ADMK protest

மஞ்சள் நிற விக் அணிந்து போராட்டம்

பொன்முடியை கிண்டல் செய்யும் வகையிலும் மஞ்சள் நிற முடியை அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொன்முடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பிய மகளிர் அணியினர் அமைச்சரவையில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

Read more Photos on
click me!

Recommended Stories